ல
286 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
லின், ‘போதவீழ்மலை’
என்கிறார். 1‘திருமலையைக் கிட்டும்
அதுவே இவ்வாத்துமாவுக்குப் பிரயோஜனமாக முடிவது; அல்லாதவை எல்லாம் பயன் அற்ற காரியங்கள்,’
என்கிறார்.
(10)
222
பொருள்என்றுஇவ்
உலகம் படைத்தவன் புகழ்மேல்
மருள்இல்வண் குருகூர்
வண்சட கோபன்
தெருள்கொள்ளச்
சொன்னஓர் ஆயிரத்துள் இப்பத்து
அருளுடை யவன்தாள்
அணைவிக்கும் முடித்தே.
பொ-ரை :
பயன்படும் என்று இவ்வுலகத்தைப் படைத்தவனுடைய நற்குணங்கள் விஷயமாக மயக்கம் இல்லாத, வளப்பம்
பொருந்திய திருக்குருகூரில் அவதரித்த கொடையையுடைய ஸ்ரீசடகோபரால் ஆத்துமாக்கள் ஞானத்தைக்
கொள்ளும்படியாக அருளிச்செய்யப்பட்ட ஒப்பற்ற ஆயிரம் பாசுரங்களில் இப்பத்துப் பாசுரங்களும்
பாவங்களை அழித்து, அருட்கடலான இறைவனுடைய திருவடிகளில் சேர்ப்பிக்கும்.
வி-கு :
புகழ்மேல்-‘மேல்’ ஏழனுருபு. ‘இப்பத்து முடித்து
அணைவிக்கும்,’ எனக் கூட்டுக.
ஈடு :
முடிவில், 2‘இத்திருவாய்மொழிகற்றாரை,
இத்திருவாய் மொழிதானே பிறப்பினைப் போக்கி அழகர் திருவடிகளிலே சேர்த்து விடும்,’ என்கிறார்.
பொருள் என்று இவ்வுலகம்
படைத்தவன் புகழ்மேல் மருள் இல்வண் குருகூர் வண்சடகோபன் சொன்ன ஆயிரம் பயன்படும் என்று இல்வுலகங்களை
உண்டாக்கினவனுடைய கல்யாண குணங்கள் விஷயமாக அறிவின்மையின் வாசனையும்
இல்லாத ஆழ்வாரால் அருளிச்செய்யப்பட்ட ஆயிரம்.
3இவற்றை
உண்டாக்கி உடல் உறுப்புகளைக் கொடுத்து விட்டால், கொடுத்த உறுப்புகளைக் கொண்டு ஐம்புல இன்பங்களில்
ஆசையுடையராய்க் கை கழியப்புக்கால், ‘நம் நினைவு தப்பியது அன்றோ?’ என்று நெகிழ்ந்து கை
வாங்குகையன்றி, ‘ஒருநாள் அல்லா ஒருநாளாகிலும் பயன்படாதோ?’
_______________________________________________________
1. ‘பொருள் புகுவதே’
என்று ஏகாரத்தைப் பிரித்துக் கூட்டித் ‘திருமலையைக் கிட்டுமதுவே
இவ்வாத்துமாவுக்குப் பிரயோஜனமாக
முடவது; அல்லாதவை எல்லாம் பயனற்ற
காரியங்கள்,’ என்கிறார்.
2. ’இப்பத்து முடித்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும்,’ என்றதனைக் கடாட்சித்து
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
3. இந்தப் பத்தின்
221-ஆம் பக்கம் வியாக்கியானத்தை ஈண்டு நினைவு கூர்க.
|