ம
|
38 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
மாத்திரையாய் நின்றது.
‘உலகு’ என்பது, ஈண்டு உயிர்களுக்கு ஆயிற்று. ‘விடப்பெய் கோபாலன்’ என முடிக்க, ‘அருளால் ஈ பாவம்
செய்து’ என்று அருளால் என்பதனை முன்னுங்கூட்டுக. கோளரி ஏறு அன்றி அருளால் அளிப்பார் ‘ஆர்?’
என்க. யார் என்பது ‘ஆர்’ என மருவிற்று.
ஈடு :
இரண்டாம் பாட்டு. ‘அல்லது இல்லை’ என்று நீர் சொல்லுவான் என்? பிரமனும் சிவனும் இறையவர்களாகப்
பேசப்படுகின்ற பிரமாணங்களும் சில இருக்கின்றனவே?’ எனின், ‘‘அவர்கள் நிலையினை ஆராய்ந்தால்,
தலை அறுப்பாரும் தலை அறுப்புண்டு நிற்பாருமாக இருக்கிறார்கள்; அவர்கள்ஆபத்தினைப் போக்கிக்
காத்தளிக்கின்றான் இவன்; அவர்களோ, இவனோ சர்வேஸ்வரன்?’ என்கிறார்.
‘ஏஎ’ என்றது ‘ஓஒ’
என்றபடி. இதனால் துக்கத்தின் மிகுதியினைக் குறிக்கிறார். ஏஎ பாவம் - இரத்தினத்திற்கும்
காட்டில் உலர்ந்து கிடக்கும் வரட்டிக்கும் வேறுபாடு உண்டு என்று சொல்ல வேண்டுவதே! மக்கள்
சிற்றறிவினர்களாய் இருத்தலின், பகவானுடைய பரத்துவத்தை விளக்கவேண்டி இருக்கின்றதே என்னும்
இன்னாப்பாலே ’என்னே பாவம்!’ என்கிறார். பரமே -1‘பகவானுடைய குணங்களைஅநுபவிக்குமது
ஒழிய, இது நமக்குக் கடமை ஆவதே! இதுநாம்செய்யக்கூடியதாக வந்து விழுவதே!’ என்றபடி. ஏழ் உலகும்
-ஏழ் உலகங்களிலும் உண்டான மக்கள் இருக்தே குடியாகப் பாவங்களைச் செய்து அப்பாவங்களால் தங்களை
நிறைத்துக்கொள்ள. ஈ பாவம் செய்து - பாவங்களை அழியும் படியாகச் செய்து. அருளால் - பாவங்களை
அழிக்கும் போது, மக்கள் விரும்ப, தான் செய்தல் அன்றி நிர்வேஹதுகக் கிருபையாலே.
அளிப்பார் ஆர் - இவர்களை ஈரக்கையால் தடவிக் காப்பார் ஆர்? அளிப்பான் இவன் என்னாதே
‘ஆர்’ என்கிறார். அவர்களுக்கும் சத்துவம் தலை எடுத்தபோது, ‘நீர் சொல்லுகிறவனே’ என்று
இசையவேண்டும் பிரசித்தியாலே. 2‘ஸ்ரீராமா!! நீதான் எல்லா உலகங்களிலும்
இருக்கின்ற எல்லா உயிர்களினுடைய பாவங்களை எல்லாம் போக்கித் தூய்மை ஆக்குபவன்,’ என்றும்,
3‘காப்பாற்றுவதில் நிலை நின்றவனாயும் எல்லா உயிர்கட்கும் ஈஸ்வரனாயும் மகாத்துமாவாயும்
இருக்கின்ற விஷ்ணுவைத் தவிர,
____________________________________________________________
1. இவ்வாறு உபதேசித்தல்,
பகவத் குணாநுபவத்துக்குத் தடையாய் இராநின்றதே என்று
இரங்குகிறார்.
2. ஸ்ரீராமா. உத்தர. 82 :
9.
3. ஸ்ரீவிஷ்ணு புரா. 1. 22 :
19.
|