முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

இரண்டாந்திருவாய்மொழி - பா. 2

39

காத்தலாகிய ஆற்றலானது வேறு ஒருவர்க்கும் இன்று,’ என்றும் வருகின்ற பிரமாணங்களைக் காண்க. ‘மக்கள், தாங்கள் செய்த பாவங்களைப் பிராயச்சித்தத்தால் (கழுவாய்) போக்கிக்கொள்ள ஒண்ணாதோ?’ எனின், இவர்கள் செய்த பாவம் அவன் அருளால் போக்கில் போமத்தனை அல்லது, தாங்கள் பிராயச்சித்தம் செய்து போக்குதல் என்பது, அவற்றை மேன்மேலும் வளர்த்தலாகவே முடியும்.

    ‘அவன் எல்லாப் பொருள்களையும் காக்கின்ற தன்மை நிற்க; 1தந்தம் காலைத் தாம்தாம் நீட்டி முடக்க வல்லராய் இருக்கிறவர்களும் ஓரோர் அளவுகளிலே ஆபத்தை அடைவர்களாயின், அவற்றைப் போக்கிக் காக்கும்படியைப் பார்க்கலாகாதோ?’ என்கிறார் மேல்: மா பாவம் விட - 2‘பின்னால், கோபத்தால் பீடிக்கப்பட்டவனாயும் சிவந்த கண்களையுடையவனாயும் இருக்கிற என்னால் இடக்கைக் கட்டைவிரல் நகத்தின் நுனியால் அந்தப் பிரமனுடைய தலை கிள்ளப்பட்டது,’ என்கிறபடியே, உலகத்திற்கெல்லாம் குருவாயும் தனக்குத் தந்தையாயும் இருக்கிறவன் தலையை அறுத்துப் பாவத்தையுடையவனாய் நின்றான்; நின்ற அவனுடைய பெரிய பாவமானது அவனை விட்டு நீங்கும்படி. மற்றைத் தேவர்களைக்காட்டிலும் ஞானம் சத்தி முதலியவற்றால் ஓர் ஆதிக்கியத்தைப் படைத்த சிவனாற்செய்யப்பட்ட பாவமாதலின், ‘யானைக்கும் தனக்குத் தக்க வாதம்’ என்பது போன்று, அப்பாவத்தினை ‘மா பாவம்’ என்கிறார்.

    அரற்குப் பிச்சை பெய் கோபால கோள் அரி ஏறு - ‘சிவன், அழிக்கும் தலைவனான வேஷத்தோடே அதிகாரம் குலையாதே நின்று பாவத்தை விளைத்துக்கொண்டான்’ என்பார், ‘அரன்’ என்கிறார். ‘இறைவன், அவனுடைய துக்கத்தைப் போக்கியது அங்கே இங்கே தோன்றித் திரிகிற இடத்திலே என்பார், ‘கோபாலன்’ என்கிறார். இதனால், இவர்கள் எத்துணை உயர நிற்பினும் கேட்டினையே சூழ்த்துக் கொள்ளுவார்கள் என்பதும், இறைவன் எத்துணைத் தன்னைத் தாழவிட்டாலும் காப்பாற்றுமவனாம் என்பதும் சொல்லப்பட்டன. கோபால கோள் அரி ஏறு - கோபாலருடைய மிடுக்கையுடைத்தான ஆண் சிங்கம். கோள் - வலிமை. ‘பிறருடைய வலிமையினைக் கொள்ளுகின்ற’

_____________________________________________________________

1. ‘தந்தம்’ என்று தொடங்கும் வாக்கியம், மிகச் சிறிய ஆற்றலையுடைவர்’ என அவர்களது
  ஆற்றலின் சிறுமையைக் குறிக்க வந்தது.

2. மத்ஸபுராணம்