என
40 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
என்று உரைத்தலுமாம். நித்தியசூரிகளை
எல்லாம் ஏவுகின்ற இறைவன் ஆயர்களால் ஏவப்படுகின்றவனாய் இருக்கும் செருக்கினைத் தெரிவிப்பார்,
‘அரியேறு’ என்கிறார்.
‘தீவினைகளால்
பீடிக்கப்பட்டவர்களாய்த் துன்பத்தினை அடைகின்ற இவர்களை ஈஸ்வரர்கள் என்போமோ, ஆபத்துகளைப்
போக்கிப் பாதுகாக்கும் இவனை ஈஸ்வரன் என்போமோ?’ என்கிறார்.
(2)
124
ஏறனைப் பூவனைப்
பூமகள் தன்னை
வேறின்றி விண்தொழத்
தன்னுள் வைத்து
மேல்தன்னை மீதிட
நிமிர்ந்துமண் கொண்ட
மால்தனின்
மிக்கும்ஒர் தேவும் உளதே?
பொ - ரை :
‘இடப வாகனத்தையுடைய சிவனையும் தாமரைப் பூவில் பிறந்த பிரமனையும், தாமரைப் பூவில் வீற்றிருக்கிற
பெரிய பிராட்டியாரையும் வேறுபாடு இன்றி, அயர்வறும் அமரர்கள் தொழும் படி தனது திருமேனியில் வைத்து,
மேலே உள்ள உலகங்களுக்கு எல்லாம் மேலே செல்லும்படி வளர்ந்து உலகத்தை அளந்துகொண்ட அறப்பெரிய
தெய்வத்தைக்காட்டிலும் உயர்ந்ததாகக் கூறத்தக்க வேறு தெய்வமும் உளதோ? இல்லை’என்றவாறு.
வி-கு :
‘தொழவைத்து நிமிர்ந்துகொண்ட மால்’ என்க. உளதே
- ஏகாரம் எதிர்மறைப்பொருளது. ‘மாறுகொள் எச்சமும்’ என்ற எழுத்ததிகாரச் சூத்திரத்தில் எதிர்மறைப்பொருளையும்
ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியுள்ளமை காண்க.
ஈடு :
மூன்றாம் பாட்டு. 2‘சௌசீல்யத்தாலும்,
உலகங்களை எல்லாம் மூன்று அடிகளால் அளத்தலாகிய மனிதர்கள் அளவுக்கு அப்பாற்பட்ட செயலாலும்
இவனே இறைவன்,’ என்கிறார்.
____________________________________________________________
1. ‘திரண்டுஅமரர் தொழுதுஏத்தும்
திருமால் நின் செங்கமல
இரண்டடியால் மூவுலகும் இருள்தீர
நடந்தனையே’
(சிலப். ஆய்ச்)
இங்கு ‘இருள தீர’
என்றதன் பொருளை ஊன்றிநோக்கி மகிழ்க. ‘எல்லார்
தலைகளிலும் காலை வைத்தவனை இறைவன் என்னவோ,
இவன் காலிலே
துகையுண்டவர்களை இறைவர் என்னவோ?’ என்கிறார். இருள் - ‘பரம்பொருள் அவனோ,
பிறரோ?’ என்ற அஞ்ஞானம்.
2. சௌசீல்யமாவது, ஸ்ரீவைகுண்டம்
கலவிருக்கையாகவுடையவன், அங்குநின்றும் சம்சாரி
சேதநர் நின்றவிடத்தே வந்து அவதரித்து எளியனாமிடத்து,
‘சிறியார் அளவிலே நம்மைத்
தாழ விட்டோமே!’ என்றுதன திருவுள்ளத்திலும் இன்றி இருத்தல்.
|