ஏற
இரண்டாந்திருவாய்மொழி - பா. 3 |
41 |
ஏறனை - சர்வேஸ்வரன்
‘கருடவாகனன்’ என்று இறுமாந்து இருக்குமாறு போன்று, ஓர் எருத்தைத் தேடிக் கைக்கொள் ஆண்டிகளைப்போன்று
இறுமாந்து இருப்பவன். பூவனை - ‘திருநாபிக் கமலத்தில் நேரே பிறந்தவன் அன்றோ?’ என்று இறுமாந்து
இருக்கும் நான்முகன். அதாவது, தாமரைப்பூவில் பிறந்தவனாதலின் பிறப்பு இல்லாதவன் என்று நினைத்திருப்பவன்
என்றபடி. பூமகள் தன்னை - தாமரைப்பூவில் வாசனையும் உபாதானமாகப் பிறந்தவளாய், இன்பமே ஒரு
வடிவு கொண்டவளாய், 1‘உனக்கு ஏற்கும்’ என்னும்படி தலைமை தோன்ற, ‘பூமகள் தன்னை’
என்கிறார். மற்றும், அவர்களை ‘ஏறனை, பூவனை’ என்கிற விருப்பம் இன்மையைப் புலப்படுத்துகிற
வார்த்தைகளாற் கூறியவதனானும் இவளுடைய முதன்மை தோன்றும்.
விண் தொழ வேறு
இன்றித் தன்னுள் வைத்து - வேறு பொருள்களிலும் மனத்தைச் செலுத்துகிற பிரமன் சிவன் இவர்கட்கும்,
வேற்றிடத்து மனத்தைச் செலுத்தாத பெரிய பிராட்டியாருக்கும் ஒக்க முகங்கொடுத்து வைக்கிற சீலத்தை
நினைத்து விண்ணினுள்ளார் தொழாநிற்பார்கள். ‘பிரமன் முதலானோர் எப்போதும் திருமேனியைப்
பற்றி இருப்பார்களோ?’ என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க, 2‘ஒரோ ஆபத்துகளிலே
திருமேனியிலே இடங்கொடுக்கிறான்; அந்நீர்மையை விடமாட்டாமையாலே ஆழ்வார்கள் அதனையே வாய்
புலற்றுகிறார்களத்தனை’ என்று அருளிச்செய்தார். 3‘ஏறாளும் இறையோனும் திசைமுகனும்
திருமகளும் கூறாளும் தனி உடம்பன்’ என்கிறபடியே, வேறுபாடு இன்றி உடம்பைக் கொடுத்துள்ளானாதலின்,
‘வேறின்றி’ என்கிறார். ’கட்டில் கத்துகிறது’ என்பது போன்று ‘விண்’ என்பது இடவாகுபெயர்.
இங்குள்ளார் 4‘ஜஸ்வரியம்’ என்றிருப்பார்கள்; அங்குள்ளார் ‘சீலம்’ என்று தோற்று
இருப்பார்களாதலின், ‘விண் தொழ’ என்கிறார்.
மேல் தன்னை மீதிட
நிமிர்ந்து மண்கொண்ட - மேலே உள்ள உலகங்களை 5‘அப்பால் மிக்கு’ என்கிறபடியே,
விஞ்ச வளர்ந்து,
_____________________________________________________________
1. திருவாய், 10. 10 : 6.
2. முதற்பத்து, ஈட்டின் தமிழாக்கம்,
பக். 113 காண்க.
3. திருவாய். 4. 8 : 1.
4. ஜஸ்வரியம் - இறைமைத்
தன்மை.
5. திருநெடுந்தாண்டகம்.
|