முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

பூம

42

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

பூமிப் பரப்பெல்லாம் திருவடிகளின்கீழே இட்டுக்கொண்ட. மால் தனில் - இவ்வதிமா நுஷச் செயல்களையுடைய சர்வேஸ்வரனைக் காட்டிலும் மிக்கும். ஓர் தேவும் உளதே - ஒக்கப் பரிமாறாநிற்க, 1‘கட்டக்குடி’ என்று கழிக்கலாம் தெய்வந்தான் உண்டோ?

    2‘எல்லார் தலைகளிலும் காலை வைத்தவனை ‘ஈஸ்வரன்’ என்னவோ, இவன் காலிலே துகையுண்டவர்களை ‘ஈஸ்வரர்கள்’ என்னவோ?’ என்கிறார்.

(3)

125

        தேவும் எப்பொருளும் படைக்கப்
        பூவில் நான்முகனைப் படைத்த
        தேவன் எம்பெருமானுக்கு அல்லால்
        பூவும் பூசனையும் தகுமே?

    பொ - ரை : தேவர்களையும் மற்றை எல்லாப் பொருள்களையும் உண்டாக்குவதற்குத் தனது திருவுந்தித் தாமரையினின்றும் நான்கு முகங்களையுடைய பிரமனைப் படைத்த ஒளியினையுடையவனான எம்பெருமானுக்கு அல்லாமல் ஏனையோர்க்கு மலர்களும் மலர்களால் அருச்சித்து வணங்கும் வணக்கமும் தகுவன ஆகுமோ? ஆகா என்றபடி.

    வி - கு : ‘தேவு - தெய்வத்துக்கு ஒரு பெயர்’ என்பர், நச்சினார்க்கினியர். (சிந். கட. வாழ்த்) ‘படைக்கப் படைத்த தேவன்’ என்றும், ‘அல்லால் தகுமோ?’ என்றும் முடிக்க. தகுமே - ஏகாரம் எதிர்மறைப் பொருளது. பூசனை - நாடோறும் கடவுளர்க்குச் செய்யப்படும் வழிபாடு முதலியன. ‘சிறப்பொடு பூசனை செல்லாது’ என்றார் திருவள்ளுவர்.

    ஈடு : நான்காம் பாட்டு 3‘சௌகுமார்யத்தாலும் முதன்மை யாலும் இவனே இறைவன்,’ என்கிறார்.

_____________________________________________________________

1. கட்டக்குடி - கஷ்டப்படுகிற குடும்பி; வறியவன் அல்லாதாரோடு ஒக்கப்
  பரிமாறாநிற்கச்செய்தே, ‘இறை இறுக்கமாட்டான்’ என்று கழிப்புண்ணும் கட்டக்குடி
  போலே என்றபடி.

2. ‘நிவந்தோங்கு உயர்கொடிச் சேவ லோய்! நின்
  சேவடி தொழாரு முளரோ? அவற்றுள்
  கீழேழ் உலகமும் உற்ற அடியினை’

(பரி. 3. 18 - 20.)

என்ற பகுதி ஈண்டு ஒப்பு நோக்குக.

3. ‘தேவன்’ என்றதனால் சௌகுமார்யமும், ‘எம்பெருமான்’ என்றதனால் முதன்மையும்
  பெறப்படும்.