New Page 1
|
இரண்டாந்திருவாய்மொழி - பா. 4 |
43 |
தேவும் எப்பொருளும்
படைக்கப் 1பூவில் நான்முகனைப் படைத்த தேவன் - தேவர்களுடைய கூட்டங்களையும் மற்றை
எல்லாப் பொருள்களையும் உண்டாக்குவதற்காக, 2ஒரு பூவில் நான்கு பூக்கள் பூத்தாற்
போன்று நான்கு முகங்களையுடைய பிரமனை உண்டாக்கினவன். தேவன் - பிரமனைப் படைத்தவன் ஆதலின்,
அதனால் உண்டான காந்தியினையுடையவன். இனி, ‘தேவன்’ என்பதற்குப் படைத்தல் முதலிய தொழில்களை
விளையாட்டாக உடையவன் என்றும், அழகு முதலியவைகளால் வந்த விளக்கத்தினை உடையவன் என்றும்
கோடலுமாம். எம்பெருமானுக்கு அல்லால் - படைத்தல் முதலிய தொழில்களைச் செய்த உபகாரத்தாலும்
படைத்தலுக்கு உறுப்பான குணங்களாலும் என்னை அடிமை கொண்டவனுக்கு அல்லாமல். பூவும் பூசனையும் தகுமே
- 3‘சிக்குத் தலையனுக்குப் பூத்தகாது; பிச்சை உண்ணிக்குப் பூசனை தகாது; பூத்தகுவது
சுகுமாரனுக்கு; பூசனை தகுவது முதன்மையுடையவனுக்கு; ஆதலால், இவனை ஒழிந்தவர்க்குத் தகாது,’ என்கிறார்.
இறைவனுடைய முதன்மையினை
நெடும்போது விரிவாகக் கூறிக் கொண்டே வந்து, 5‘பெரியதாயும் விசாலமானதாயும்
நீண்டதாயும் இருக்கிற திருக்கண்களையுடையவன்காண், உங்களுக்கு மைத்துனனாகப் புகுந்திருக்கிற
கிருஷ்ணன்,’ என்று அவ்விறமைத் தன்மையினைக் கிருஷ்ணன்மேல் மாட்டெறிந்தான், தத்துவ
ஞானியான வீடுமன். அவ்வாறு மாட்டெறிந்து முதன்மையினை அறுதியிட்ட வீடுமனுக்கு ஒரு சிறப்பும் செய்திலர்
தேவர்கள், 6‘கிருஷ்ண பரமாத்துமாவை, இந்த இராய சூய யாகத்தில் பூசிக்கத் தக்கவராக
நாங்கள் விரும்புகிறோம்; இச்சபையில் இருக்கிற நீங்கள் எல்லோரும்.
_____________________________________________________________
1. ‘நீனிற உருவின் நெடியோன்
கொப்பூழ்
நான்முக ஒருவற் பயந்த பல்லிதழ்த்
தாமரைப் பொகுட்டின்’
(பெரும்பாண்.)
என்றார் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.
2. ‘ஒரு பூ’ என்றது, பிரமன்
உதித்த உந்தித் தாமரையினை ‘நான்கு பூ’ என்றது, நான்கு
முகங்களை.
3. சிக்குத் தலையன் - பிரமன்;
சிவனுமாம். இவர்கள் சடையினையுடையவர்களாதலின்
‘சிக்குத் தலையன்’ எனப்பட்டனர்.
4. பிச்சையுண்ணி - சிவன்.
5. பாரதம்.
6. பாரதம், ராஜசூய
|