முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

அவ

44

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

அவரைப் பூசிப்பத்தற்கு உங்கள் உடன்பாட்டினைத் தெரிவிப்பதற்குத் தக்கவர்களாய் இருக்கின்றீர்கள்,’ என்று சகாதேவன் கூறித் தனது வைராக்கியத்தைத் தெரிவித்த காலத்தில், அவன் வைராக்கியத்தைக் கண்ட தேவர்கள், அவன் தலையில் மலர் மாரியைப் பெய்து அவனை வாழ்த்தினார்கள். இதனால், ஒருதலையாக வேண்டற் பாலது ஞானத்தைக் காட்டிலும் வைராக்கியமே என்பது புலப்படும். ஆதலால். இவரும், ‘அல்லது இல்லை ஒரு கண்ணே’ என்றும், ‘கோள அரியேறு அன்றி அருளால் அளிப்பார் ஆர்’ என்றும், ‘மால்தனில் மிக்குமோர் தேவும் உளதே?’ என்றும், ‘பூவும் பூசனையுந் தகுமோ?’ என்றும் அவ்வைராக்கியத்தையே அருளிச்செய்தார்.

(4)

126

        தகும்சீர்த் தன்தனி முதலி லுள்ளே
        மிகும்தேவும் எப்பொருளும் படைக்கத்
        தகும்கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
        மிகும்சோதி மேல்அறிவார் எவரோ?

    பொ - ரை : ‘படைத்தல் முதலிய தொழில்களுக்குத் தக்க ஞானம் சக்தி முதலிய குணங்களையுடையவன், தன்னுடையதாகித் தனித்த காரணமான மூலப் பகுதியினுள்ளே மேலான தேவர்களையும் மற்றும் எப்பொருள்களையும் படைக்கத் தகுதியான அழகிய தாமரை போன்ற திருக்கண்களையுடையவன், என்னை அடிமை கொண்டவன், பேரொளி உருவன் ஆன எம்பெருமானுக்கு மேம்பட்ட ஓர் இறைவன் உளன் என்று அறிகின்றவர் யாவர்? ஒருவரும் இலர்’ என்றபடி.

    வி-கு : தனி முதல் - தனித்த காரணமான மூலப்பகுதி. தனி என்பது, இரண்டாவது வேறு காரணம் இன்மையைக் குறிக்க வந்தது. மேல் - மேம்பட்ட பொருள். அறிவார் - வினையாலணையும் பெயர். ‘யவர்’ என்பது, முன்பு உள்ள பாடம். ‘எவர்’ என்னும் வினா ஈண்டு இன்மை குறித்து நின்றது.

    ஈடு : ஐந்தாம் பாட்டு. 1‘தாமரைக்கண்ணன் ஆகையாலும் இவனே இறைவன்,’ என்கிறார்.

    தகும் சீர் - படைத்தலுக்குத் துணையான ஞானம் சக்தி முதலிய குணங்களையுடையவன். தன் தனி முதலினுள்ளே - காரிய வர்க்கத்துக்கு அடையக் காரணமான மூலப் பிரகிருதி.

_____________________________________________________________

1. ‘தாமரைக் கண்ணன்’ என்னும் இத்திருப்பெயரையே திருவள்ளுவர் தம் நூலுள் ஒதுதல்
  காண்க.