முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

இன

இரண்டாந்திருவாய்மொழி - பா. 5

45

    இனி, இதற்கு, 1‘நான் பல பொருள்கள் ஆகின்றேன்,’ என்கிற படியே, அந்த மூலப்பகுதிக்கும் காரணமான சங்கல்ப ரூப ஞானம் என்று பொருள் கூறலுமாம். 2‘உலகத் தோற்றத்திற்குப் பரமாணுக்களே காரணம்’ என்பாரும் உளராதலின், அவர் கொள்கையினின்றும் வேறுபடுத்துவதற்குத் ‘தனி’ என்னும் அடைபுணர்த்து ஓதுகிறார். மிகும் தேவும் - தன்னோடு 3மசக்குப் பரல் இடலாம்படியான தேவசாதியையும், 4‘சிவனுடைய வில் விஷ்ணுவின் ஆற்றாலால் ஒடிபட்டதனைக் கண்டு விஷ்ணுவே பரம்பொருள் என்று எண்ணினார்கள்,’ என்னலாம்படி அவர்களுடைய மிகை இருத்தலின், ‘மிகும் தேவும்’ என்கிறார்.

    எப்பொருளும் படைக்கத் தகும் கோலம் தாமரைக் கண்ணன் எம்மான் மிகும் சோதி - ‘மற்றும் உண்டான எல்லாப் பொருள்களையும் உண்டாக்குகைக்குத் தகுவான்-ஒருவன்’ என்னுமிடத்தைத் தெரிவிப்பனவாய், காக்குந் தன்மை இல்லையாயினும், ‘காட்சிக்கு இனியவாய்க் குளிர்ந்திருக்கிற திருக்கண்களையுடைவனாய், அக் கண் அழகாலே என்னை அடிமை கொண்டவனே மிக்க பேரொளியை யுடையவன். ‘தகும் கோலம் தாமைரைக் கண்ணன் எம்மான்’ என்று 5திருவடி தோற்ற துறையிலே இவரும் தோற்கிறார். 6‘பரஞ்சோதி என்னும் சொல்லுக்குப் பொருளான பரம்பொருளினை அடைந்து’ என்றும், 7‘பரம்பொருளும் நாராயணனே, பரஞ்சோதியும்

_____________________________________________________________

1. தைத்திரீய. ஆனந். 6 : 3.

2. முதற்பத்து அவதாரிகை, ‘திருமகள் கேள்வன் ஒன்று’ பக். 10.11. காண்க.

3. மசக்குப் பரலிடலாம்படி - சந்தேகம் கொள்ளும்படி

4. ஸ்ரீராமா. பால. 75 : 19.

5. ராம சர்வாங்க சுந்தரராய் இருக்கை. கமலபத்ராக்ஷ - அதிலே ஒரு சுழியாயிற்று
  அமிழ்ந்துவராக்கு வேண்டுவது. ‘அக்கண் அழகுக்கு எல்லை என்?’ என்னில், ஸர்வ
  ஸத்வ மநோஹர:- திர்யக் ஜாதியனாய்ப் பணையோடு பணை தத்தித் திரிகிற என்
  நெஞ்சையும் அபஹரித்தன்றோ? ரூப தாக்ஷிண்ய ஸம்பந்த ப்ரஸூத; - தேக
  குணங்களாலும் ஆத்ம குணங்களாலும் குறையற்றதுதான் ஒளத்பத்திகமாயிருக்கும்.
  ஜநகாத்மஜே -‘அற விஞ்சச் சொன்னாய்; இனி, இங்ஙன் சொல்லலாவார் உண்டோ,
  இல்லையோ?’ என்று பிராட்டிக்குக் கருத்தாக, பின்னை உம்மைச் சொல்லலாம், நீரும்
  உண்டு’ என்கிறான் திருவடி. திருவடி - அநுமான். ஸ்ரீராமா. சுந். 53 : 8

6. சாந்தோக்கியம். 

7. தைத்திரீய நாரா, அநு. 11.