ந
46 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
நாராயணனே’ என்றும் கூறப்படுமவன்
ஆதலின், ‘மிகுஞ்சோதி'
என்கிறார். மேல் அறிவார்
எவரே - இவனை ஒழிய நாராயணாநுவாகச் சித்தமாய்
இருப்பது ஒரு பொருள் உண்டு என்று அறிவார் யாவரேனும் உளரோ? எவரோ -1‘எந்த வைதிகன்?’
என்றார் ஸ்ரீ ஆளவந்தார்.
‘உனக்கே உரியதான
நாராயணாநூவாகாதிகளிலே கூறப்பட்ட பெருமையையுடைய உன் பக்கலிலே பொறாமை கொண்டிருப்பான் ஒரு வைதிகன்
உளனோ? உளனாகில், அவன் அவைதிகனாமித்தனை’ என்றபடி. 2‘பரம்பொருளான
விஷ்ணுவினிடத்தில் பத்தி இல்லாதான் ஒருவன் எல்லாச் சாத்திரங்களின் பொருள்களையும் அறிந்தவனாய்
இருப்பினும், அவனிடத்தில் பிராமணத் தன்மை இல்லை; அவன் பிறவியினை ஆராய்தல் வேண்டும்,’
என்பது பத்மபுராணம்.
(5)
127
எவரும் யாவையும்
எல்லாப் பொருளும்
கவர்வுஇன்றித்
தன்னுள் ஒடுங்க நின்ற
பவர்கொள் ஞான
வெள்ளச் சுடர்மூர்த்தி
அவர்எம் ஆழி
அம்பள்ளி யாரே.
பொ - ரை :
உயர்திணையும் அஃறிணையுமான எல்லாப் பொருள்களும்
ஒன்றோடு ஒன்று நெருக்கு உண்ணாதவாறு தன் வயிற்றில் ஒடுங்கும்படி நின்ற, பரந்து விரிந்த ஞானவெள்ளத்தினையுடைய
ஒளி மிகுந்த திருமேனியையுடையவர் யாவர்? அவர்தாம், எமக்காகத் திருப்பாற் கடலில் அறிதுயில்
செய்கின்றவர் ஆவர்.
வி-கு :
‘இன்றி
ஒடுங்க நின்ற’
என முடிக்க.
அவ்வாறு முடித்து ‘நின்ற’ என்பதனை ‘மூர்த்தி’
என்பதனோடு முடிக்க. மூர்த்தி - திரு மேனியையுடையவன். கவர்வு - ஒரு பொருளும் மற்றொரு பொருளும்
நெருக்குண்டு அந்நெருக்கால் வருந்தல். பவர் - பரப்பு.
ஈடு :
ஆறாம் பாட்டு. 3‘ஆபத்துக் காலத்தில் துணைவன் ஆகையாலும் இவனே இறைவன்,’ என்கிறார்.
____________________________________________________________
1. தோத்திர ரத்நம், 11.
2. பத்ம புராணத்து இச்சுலோகத்தோடு,
‘நலத்தின்கண் நாரின்மை
தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப்
படும்.’
3. “தன்னுள் ஒடுங்க நின்ற’
என்ற பதங்களைக் கடாஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
|