முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

New Page 1

முதல் திருவாய்மொழி - பா. 1

5

சொல்லி ஆற்றினளாம். இதனைக் ‘காமம் மிக்க கழிபடர் கிளவி’ என்று கூறுதலுமுண்டு. முதல் ஒன்பது பாசுரங்களும் இத்துறையே எனக் கொள்க. மடம் - கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை. ‘நாரை’ என்னும் ஐகார ஈற்றுப் பெயர், விளி ஏற்றலின், ‘நாராய்’ என நின்றது. ஆய் - யாய் என்பதன் மரூஉ. ‘என் தாய்’ என்பது பொருள். ‘யாயும் ஞாயும் யாராகியரோ!’ என்றார் பிறரும். அமருலகு - அமரர் உலகு என்பதன் விகாரம். நோய் - பிரிவாற்றாமையால் மனத்தில் நிகழும் காமநோய்; இது, உடல் மெலிவிற்றுக் காரணம். பயலை - பசலை; காதலன் பிரிவால் தலைவிக்குத் தோன்றுகிற ஒரு நிறவேறுபாடு; இதன் நிறம் பீர்க்கு, கொன்றை இவற்றின் மலர்களின் நிறத்தினைப் போன்றது என்பர். ‘எம்மேபோல்’ தனித்தன்மைப்பன்மை. கோள். - முதனிலை திரிந்த தொழிற்பெயர்.

    இத்திருவாய்மொழி, நாற்சீர் நாலடியான் வருதலின் கலி விருத்தம் எனப்பெறும்.

    ஈடு : முதற்பாட்டு. 1பிரிந்தார் இரங்குவது நெய்தல் நிலத் திலேயாகையாலே, கடற்கரைச் சோலையின்கண் இவள் பிரிவால் வருந்தி இரங்குகின்ற காலத்தில், ஆங்கு இரைதேடுதல் நிமித்தமாகத் தங்கியிருந்த ஒரு நாரை இவள் கண்ணுக்கு இலக்காக, அதன் உடம்பில் வெளுப்பைக் கண்டு, அதுவும் தன்னைப் போன்று பிரிவாற்றாமையாலே வந்த பசலை நிறத்தோடு இருக்கிறதாகக் கொண்டு, ‘பாவியேன் நான் அகப்பட்ட விஷயத்திலே நீயும் அகப்பட்டு நெஞ்சு பறியுண்டாயோ?’ என்கிறாள்.

    வாயும்  திரை உகளும் கானல் மடநாராய் - பெரிய மலை போல வந்து கிட்டுகிற அலைகள் மேலே தாவிப் போகா நின்றாலும் நினைத்தது கைப்புகுமளவும் சலியாமல் கடற்கரைச் சோலையில் தங்கியிருக்கின்ற நாரையே! ‘பகவானைத் தியானிப்பவர்கள் சலியாமல் இருப்பது போன்று சலியாமல் இருக்கிற நாரையே!’ என்கிறாள். அதாவது, 2‘அலைகடல் நீர்குழம்ப அகடுஆட ஓடி அகல்வான் உரிஞ்ச முதுகில், மலைகளை மீது கொண்டு வருமீனை’ மறவாது இருப்பார்க்குப் போலியாய் இராநின்றது, அலைகளை மீதுகொண்டு வருமீனை மறவாதிருக்கின்ற இந்நாரையும் என்றபடி. இனி, ‘மீனைக் குறிக்கோளாகக்

____________________________________________________________

1. ‘போக்கெல்லாம் பாலை; புணர்தல் நறுங்குறிஞ்சி; ஆக்கஞ்சேர் ஊடல் அணிமருதம்; -
  நாக்குங்கால் இல்லிருக்கை முல்லை; இரங்கல் நறுசெய்தல் சொல்லியிருக்கும் ஐம்பால்
  தொகை.’

2. பெரிய திருமொழி. 11. 4 : 1