New Page 1
6 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
கொண்டு சலியாமல் நிற்கின்ற
நாரையே! என்று கொள்ளாது, 1‘சர்வேஸ்வரன் காப்பவன் என்று இருப்பார், 2மூவகைத்
துன்பங்களாலும் வருகின்ற இடையூறுகட்கு இடையாதே இருக்குமாறு போன்று, மலைகள் போன்ற அலைகள் மேலே
தாவிச் சென்றாலும் அதற்குச் சலியாமல் இருக்கின்ற நாரையே! என்று கோடலும் ஆம். இனி, திரை
உகளுதலை மடநாரைக்கு அடைமொழி ஆக்காது, திரை உகளாநின்றுள்ள கானல் (கடற்கரைச் சோலை) என்று,
திரை உகளுதலைக் கானலுக்கு அடைமொழியாக்கிக் கூறலும் ஒன்று. 3கிராமணிகள், பிறர்க்குத்
துன்பம் செய்துகொண்டே யாகங்களும் பண்ணிப் பவித்திரங்களும் முடிந்திட்டுத் ‘தார்மிகர்’ என்னும்படி
திரிவது போன்று, நாரையும். 4நினைத்த பெரிய மீன் கைப்புகுமளவும் சிறிய மீன்கள்
வந்தாலும் அவற்றில் விருப்பம் அற்று இருத்தலின், ‘மடநாராய்’ என்கிறாள். மடப்பமாவது,
பற்றிற்று விடாமை.
ஆயும் துஞ்சிலும்
- என்பிறப்பே பிடித்து உறங்காத தாயும் உறங்கிலும். அமர் உலகும் துஞ்சிலும் - தங்கள் சத்தையே
பிடித்து உறங்காத 5நித்திய சூரிகள் உறங்கிலும் நீ துஞ்சாயால் - நீ உறங்குகின்றாய்இல்லை.
‘இவளைப் பெற்ற தாய்க்கு உறக்கம் இன்மைக்குக் காரணம் என்?’ என்னில், முன்னர் இவள் இளமைப்
பருவத்தில் ‘இவளுக்குத் தக்கானாய் இருப்பான் ஒருவனைப் பெற்றுக் கொடுத்தோமாக வல்லோமே!’
என்று கண்ணுறங்காது; பின்பு, நாயகனைப் பிரிந்து இவள் நோவுபடுகிறபடியைக் கண்டு கண்ணுறங்காது;
6‘ஒரு கொள் கொம்பிலே கொண்டு போய்ச் சேர்த்து நோக்கில்
_____________________________________________________________
1. பாகவதம். 10.
20 : 15.
2. ‘சர்வேஸ்வரன்’ என்று தொடங்கும்
மேற்கோள், திரைகள் வந்து தம்மேல் தாவிச்
செல்லினும் தளர்ச்சியின்றி அசையாமலிருத்தற்கும்,
மேல், ‘அலைகடல் நீர்’ என்ற
மேற்கோள், உணவின் பொருட்டு ஒன்றையே நினைவிற்கொண்டு வேறு நினைவின்றி
இருத்தற்கும் கொள்க.
3. மூவகைத்துன்பங்கள், தெய்வத்தைப்பற்றி
வருவனவும், தன்னைப் பற்றி வருவனவும், பிற
உயிர்களைப்பற்றி வருவனவும் ஆம்.
4. கிராமணிகள் - கிராமத்தில்
தலைமை பெற்றவர்கள்.
5. ‘ஒடுமீன் ஒட உறுமீன்
வருமளவும்
வாடி இருக்குமாம்
கொக்கு.’
என வருதல் காண்க.
6. நித்திய சூரிகள் -பரமபதத்தில்
என்றும் இருப்பவர்களான தேவர்கள்.
7. ஸ்ரீராமா, அயோத். 119
: 36
|