முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

களும

மூன்றாந்திருவாய்மொழி - பா. 2

61

களும் பிறக்கும்படி கலந்தோம் என்கிறார்’ என்று எம்பெருமானார் பொருள் அருளிச்செய்வர். 1‘சர்வ ரஸ: சர்வ கந்த:’ என்கிற இறைவனோடே கலக்கும் கலவி ஆதலானும், ஞான ஆனந்தங்களையுடைய இறைவனும் ஆத்துமாவும் கலக்கிற கலவி ஆதலானும் சர்வ ரகங்களும் பிறக்கத் தட்டு இல்லை.

    நன்று; ஆளவந்தார் நிர்வாகத்திலே, ‘தேனும் தேனும் கலந்தாற்போலே கலந்தோம்’ எனின், 2இவ்விரண்டனையும் சேர்த்துச் சொல்லும்போது, வருவது ஓர் அளவின் மிகுதி உண்டு அன்றே? அவ்வளவின் மிகுதிதானே பொருள்கள் இரண்டு என்பதற்கு ஏற்ற பிரமாணமாம்.

(1)

134

        ஒத்தார் மிக்காரை இலையாய மாமாயா!
        ஒத்தாய் எம்பொருட்கும், உயிராய், என்னைப்பெற்ற
        அத்தாயாய்த் தந்தையாய் அறியாதன 3அறிவித்து,
        அத்தா! நீ செய்தன அடியேன் அறியேனே.

    பொ - ரை : ஒத்தவர்களும் உயர்ந்தவர்களும் இல்லாத மிகப்பெரிய ஆச்சரியமான குணங்களையும் செயல்களையும் உடையவனே! அவ்வப் பொருள்கட்குத் தக்க நிலைகளை உடையவனாகி வந்து அவதரித்தவனே! சுவாமியே! என்னுடைய உயிராகி, என்னைப் பெற்ற அந்தத் தாயாகித் தந்தையுமாகி, அறியாதனவற்றை எல்லாம் அறியச் செய்து நீ செய்த காரியங்களை அடியேன் அறியேன்.

    வி-கு : ‘அத்தா! தாயாகித் தந்தையாகி அறிவித்து நீ செய்தன அடியேன் அறியேன்,’ என்க. ‘இலையாய மாயா’ என்க, அறியாதன, செய்தன - வினையாலணையும் பெயர்கள்.

    ஈடு : இரண்டாம் பாட்டு. ‘அகன்ற நம்மை அவன் திருவடிகளிலே சேரவிட்டது நெஞ்சு அன்றோ?’ என்று, இவர் திருவுள்ளத்தைக் கொண்டாடப் புகுந்தவாறே, நெஞ்சு, ‘நீர் அடி

_____________________________________________________________

1. சாந். உபநிட 2 : 14.

2. ‘ஒரு படி அளவு கொண்ட தேனோடு ஒரு படி அளவினையுடைய தேனைக்
  கலக்கும்போது, அத்தேன் முன் இருந்த அளவில் நில்லாது, மற்றும் ஒரு படி அளவு
  மிகுதலைக் காண்கிறோம்’ என்று அதன் பொருளை விரித்துக்கொள்க. ‘ஐக்கியமாகில்,
  ஒரே பொருள் ஆய்விடுமே?’ என்ற வினாவிற்குக் கூறும் விடை இது.

3. ‘அறிவித்த’ என்றும் பாடம்.