முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

அற

62

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

அறியாதே, வழிப்போவாரைக் கொண்டாடுகிறது என்? என்னையும் இசைவித்த சர்வேஸ்வரனைக் கொண்டாடீர்’ என்ன, கேட்ட ஆழ்வார், ‘ஒக்கும் ஆராயின், அதற்கும் அடி இறைவன் அன்றோ? நடுவே நெஞ்சைக் கொண்டாடினோமித்தனை ஆகாதே?’ என்று தம் திருவுள்ளத்தை விட்டு, சர்வேஸ்வரனைக் கொண்டாடுகிறார்.

    1எம்பார், திருவாய்மொழிக்குப் பொருள் அருளிச்செய்து வருங்கால், இப்பாசுரம் வந்த அளவில், எம்பார் கோஷ்டியிலே ‘இவ்வாத்துமாவுக்குப் பிரதம் குரு யார்?’ என்ற ஒரு வினா எழுந்தது; இருந்த 2முதலிகளிற்சிலர், ‘ஆசாரியன்’ என்றனர்; சிலர், ‘ஆசாரியன் திருவடிகளிலே அடைவதற்கு வா என்று அழைத்துக் கொண்டு போய்ச் சேரவிட்ட ஸ்ரீவைஷ்ணவர்,’ என்றனர்; எம்பார், ‘அங்ஙன் அன்றுகாண்; அவன் இவனை அழைத்தாலும் இவன் ‘அல்லேன்’ என்னாதபடி 3‘இசைவித்து’ என்கிறபடி, அகவாயிலே இருந்து இசைவித்த சர்வேஸ்வரன்காண் பிரதம குரு’ என்று அருளிச்செய்தார்.

    ஒத்தார் மிக்காரை இலையாய மா மாயா - 4‘பரம்பொருளுக்கு ஒத்தவனும் காணப்படுவது இல்லை; மிக்கவனும் காணப்படுவது இல்லை,’ என்கிறபடியே, ஒத்தவனும் மிக்கவனும் இல்லாதவனாய் இருப்பான். திருமகள் கேள்வனுக்கும் தன்னால் கழிக்க ஒண்ணாதபடி இருப்பது ஒரு 5தாரித்திரியம் உண்டு என்று அருளிச்செய்வார், எம்பார், ‘என்னை அப்படி அங்கீகரித்த நீதான் ஒரு குறைவாளனாய்ச் செய்தாயோ?’ என்பார், ‘ஒத்தார் மிக்காரை இலையாய’ என்கிறார். ‘இவ்வாச்சரியந்தான் என்னே!’ ‘மா மாயா’ என்கிறார். எப்பொருட்கும் ஒத்தாய - ஒத்தாரும் மிக்காரும் இலையாய நீயே, இதர சாதீயனாய் வந்து அவதரித்தாய்; அவையாவன, பிரமன் சிவன் இவர்கள் நடுவில் விஷ்ணு என்னும் பெயரோடும், இந்திரனுக்குத் தம்பியாகவும், இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைச் செய்தும், விலங்குகளைப் போன்று மஹா வராஹமாகியும், நிலையியற் பொருள் போன்று குட்டை மாமரமாயும் நின்ற நிலைகள் போல்வன.

_____________________________________________________________

1. ‘அறியாதன அறிவித்து’ என்றதிலே நோக்கமாக இவ்வை திஹ்யம் அருளிச்செய்கிறார்.

2. முதலிகள் - முதன்மையுடையவர்கள்; பெரியோர்கள்.

3. திருவாய்மொழி, 5. 8 : 9

4. ஸ்வேதாஸ்வதரம்.

5. தாரித்திரியம் - வறுமை. வறுமையாவது - இல்லாமை.