முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

1ஆச

64

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

1ஆசாரியனாய் இருந்துவிரிந்த ஞானத்தையும் எனக்கு உண்டாகச் செய்து 2‘தாய் தந்தையர்கள் சரீரத்தை மட்டும் கொடுத்தார்கள்; ஆசாரியன் மாணாக்கனைக் கல்வியால் வேறு ஒரு சரீரத்தை அடையும்படி செய்கிறான்; கல்வியால் ஆய பிறவியே சிறந்தது,’ என்கிறபடியே, இச்சரீரத்தை உண்டாக்கிய தாய் தந்தையர்களைக் காட்டிலும், ஞானத்தைத் தந்து உயர்பிறவி அடையச் செய்த ஆசாரியன் சிறந்தவனாதலின், தாய் தந்தையர்கட்குப்பின் ஆசாரியனை அருளிச்செய்கிறார். ‘ஆயின், இறைவன் ஆசாரியன் ஆவனோ?’ எனின், 3‘அது என்னுடைய விரதம்’ என்றார் பெருமாள். 4‘என்னுடைய இரண்டு திருவடிகளையும் சரணமாகப் பற்று’ என்றான் ஸ்ரீகண்ணபிரான். 5‘தாயும் தந்தையும் உடன் பிறந்தவனும் வசிக்கும் இடமும் பற்றுக்கோடும் நட்டோனும் பேறும் ஆகிய அனைத்தும் நாராயணனே,’ என்பது உபநிடதம். 6’பெற்ற தாய் நீயே, பிறப்பித்த தந்தை நீ, மற்றையார் ஆவாரும் நீ பேசில்’ என்பது தமிழ் மறை.

    அத்தா - மஹோபகாரகன் ஆனவனே! இவ்வுபகாரங்களை உடையவனாகையாலே செய்தான் என்கிறார். நீ செய்தன அடியேன் அறியேன்-ஸ்வாமியான நீ, அடியவனான என் பக்கல் செய்த உபகாரங்களை அடியேன் அறியேனே. ஒன்று இரண்டு ஆகில் அன்றே ‘இன்னது’ என்னலாவது? ஆகையாலே, ‘நீ செய்தன’ என்னுமித்தனை. செய்த நீ அறியில் அறியுமித்தனை; என்னால் சொல்லித் தலைக்கட்டப் போமோ? அனுபவித்துக் 7குமிழி நீர் உண்டு போமித்தனை ஒழிய என்பார், ‘அடியேன் அறியேன்,’ என்கிறார்.          

(2)

_____________________________________________________________

1. ‘பீதக ஆடைப் பிரானார் பிரம குருவாகி வந்து’ என்பது, பெரியாழ்வார் திருமொழி.

2. ஆபஸ்தம்ப தர்ம சூத்

3. ஸ்ரீராமா, யுத். 33 : 18

4. ஸ்ரீ கீதை. 18 : 66

5. சுபாலோபநிடதம்.

6. பெரிய திருவந். 5

7. குமிழிநீர் உண்கை -‘தண்ணீருக்குள் இருக்கிற மணலைத் தொடுகின்றவாறு
  தண்ணீருக்குள் புக்குக் கீழே இறங்குதல். நீரிலே குமிழி புறப்படுதல்’ என்பது பொருள்.