முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

1 3 5

மூன்றாந்திருவாய்மொழி - பா. 3

65

135

        அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்புசெய்வித்து
        அறியா மாமாயத்து அடியேனை வைத்தாயால்
        அறியாமைக் குறளாய் நிலம்மாவலி மூவடிஎன்று
        அறியாமை வஞ்சித்தாய் எனதுஆவுயுள் கலந்தே.

    பொ - ரை : ‘பெரிய பிராட்டியாரும் அறியாதவாறு வாமனாதாரத்தைச் செய்து, ‘மாவலி, மூவடி நிலம்’ என்று இரந்து,  அசுர குருவாகிய சுக்கிரன் கூறிய சொற்களையும் மஹாபலி அறியாதவாறு அவனை வஞ்சித்தது போன்று, என்னுடைய உயிரில் வந்து கலந்து அறியாமையினை உண்டுபண்ணுகிற மிகக்கொடிய இப்பிறவியில் அகப்பட்டிருக்கும் என்னை, ஒன்றையும் அறியாத இளமைப்பருவத்திலேயே அடிமை செய்வதில் மிகப் பெரியது ஓர் அவாவை எனக்கு உண்டாக்கி வைத்தாய்,’ என்கிறார்.

    வி - கு : ‘மாவலியை வஞ்சித்தது போன்று, ‘எனது ஆவியுள் கலந்து, அறியா மாமாயத்து அடியேனை, அறியாக் காலத்துள் அடிமைக்கண் அன்பு செய்வித்து வைத்தாய்’ என்று கூட்டுக. ’கலந்து செய்வித்து வைத்தாய்’ என்க. அறியாமை - மையீற்று வினையெச்சம்.

    ஈடு : மூன்றாம் பாட்டு. ‘அறிவு நடையாடாத பருவத்தில் சம்பந்த ஞானத்தினைப் பிறப்பித்தாய்; பிறப்பித்த ஞானத்தினை அழிக்கக்கூடிய இச்சரீரத்தோடே பின்னையும் வைத்தாய்,’ என்னும் 1இன்னாப்பாலே சொல்லுகிறார் என்று ஆளவந்தார் அருளிச் செ்யாதாராகத் திருமலையாண்டான் அருளிச்செய்வர். இதனை, எம்பெருமானார் கேட்டருளி, ‘முன்னிற்பாட்டுகளும் பின்னிற்பாட்டுகளும் பிரீதியோடே நடவாநிற்க, நடுவே பிரீதியின்மை தோற்றச் சொல்லுமது சேராது; ஆன பின்னர், இங்ஙனேயாமித்தனை. ‘அறியா மா மாயத்து அடியேனை அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து வைத்தாயால் என்கிறார்,’ என்று இதனையும் ஓர் உபகாரமாக்கி அருளிச்செய்தார். ‘அத்தா நீ செய்தன’ என்று, ‘நாம் செய்த உபகாரங்களைச் சொல்லுகின்றீர்; அவற்றிலே நீர்

_____________________________________________________________

1. இன்னாப்பு - வெறுப்பு.