முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

மத

66

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

மதித்திருப்பது ஓர் உபகாரத்தைச் சொல்லிக் காணீர்,’ என்ன, அதனைச் சொல்லுகிறார்.

    1அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து - ‘இராமபிரான் பக்கல் இலக்குமணர் இளமைப்பருவம் தொடங்கி எப்பொழுதும் நேசத்துடன் இருந்தார்,’ என்கிறபடியே, அறிவு நடையாடாத பருவத்திலே 3‘தூங்குகிற நிலையிலும் விழித்திருக்கிற நிலையிலும் உமக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன்,’ என்கிறபடியே, சமுசாரத்தில் சிறிதும் சம்பந்தம் இல்லாத நித்தியசூரிகளுடைய பரிமாற்றத்திலேயன்றோ என்னைச் சேர்த்தாய்? ‘வரில் போகடேன்; கெடில் தேடேன்’ என்று இருத்தல் அன்றி, 4‘என்னை உடன் வருகின்றவனாகச் செய்தருளல் வேண்டும்’ என்கிறபடியே. பெறாவிடில் முடியும்படியான நிலையினை உண்டாக்கினாய்’ என்பார், ‘அன்பு செய்வித்து’ என்கிறார். அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால் - அறிவின்மையினை உண்டு பண்ணுகிற பிரகிருதியில் சேர்ந்தவனாயிருக்கிற அடியேனை வைத்தாய். ‘பிள்ளாய்! ஊமத் தங்காய் தின்று மயங்கினாரைப் போன்று, அசித்தில் சேர்ந்தவனாய் இருக்கிற என்னை அன்றோ இப்படிச் செய்தான்?’ என்பார், ‘அறியா மாயத்து அடியேனை’ என்கிறார். ‘இது எங்கே சிறைப்பட்டாலும் நல்லது; நம்முடைய பொருள் அன்றோ? என்று இருக்கிறான் இறைவன் என்பார், ‘அடியேனை’ என்கிறார். ‘வைத்தாயால்’ என்ற சொற்போக்கால், ‘இத்தண்ணீர்ப்பந்தலை வைத்தாயே’ என்ற தொனிப்பொருள் தோன்றும். அறியா மா மாயத்து அடியேனை அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்த வைத்தாயால்.

    தம்மை அறியாமை வஞ்சித்ததற்கு எடுத்துக்காட்டு ஒன்று அருளிச்செய்கிறார் மேல்: அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூ வடி என்று - நெஞ்சு அறியாதபடி காரியம் செய்வாரைப் போன்று, திருமார்வில் இருக்கிற நாய்ச்சியாருங்கூட அறியாதவாறு வாமன

_____________________________________________________________

1. ‘முலையோ முழுமுற்றும் போந்தில; மொய்பூங் குழல்குறிய;
  கலையோ அரையில்லை;நாவோ குழறும் ‘கடல்மண்ணெல்லாம்
  விலையோ!’ எனமிளிரும்கண் இவள்பர மேபெருமான் மலையோ திருவேங் கடமென்று
  கற்கின்ற வாசகமே?’

(திருவிருத்தம். 60)

2. ஸ்ரீராமா. பால. 18 : 27

3. ஸ்ரீராமா. அயோத். 58 : 31

4. ஸ்ரீராமா. அயோத் 31 : 32.