New Page 1
மூன்றாந்திருவாய்மொழி - பா. 4 |
67 |
வேடத்தை மேற்கொண்டு,
1‘கொள்வன் நான் மாவலி மூவடி தா என்ற கள்வனே’ என்கிறபடியே, ‘நிலம் மாவலி மூவடி’
என்ற பொருத்தம்அற்ற வார்த்தைகளைக் கூறி; பண்டும் இரந்து பழக்கம் உண்டாகில் அன்றோ
பொருத்தம் உள்ள வார்த்தைகளைக் கூறுவது? அறியாமை வஞ்சித்தாய் -2சுக்கிரன் முதலியோர்
‘இவன் சர்வேஸ்வரன்; தேவ காரியம் செய்ய வந்தான்; உன் செல்வம் அனைத்தையும் அபகரிக்க வந்தான்,’
என்றால், அவர்கள் வார்த்தைகள் செவிப்படாதவாறு உன் பேச்சாலே அவனை அறிவு கெடுத்து வஞ்சித்தாய்.
அப்படியே, எனது ஆவியுள் கலந்து - நான் இருக்குமிடத்தளவும் வந்து என்னோடே கலந்து, ‘மிகவும் பராக்காய்
இருக்கிற ஆத்துமாவிலே புகுந்து உன் குணத்தாலும் செயலாலும் வசீகரித்தாய்,’ என்பதாம்.
‘அறியாமையிற்
குறளாய் நிலம் மாவலி மூவடி என்று அறியாமை வஞ்சித்தது போன்று, எனது ஆவியுள் கலந்து, அறியா மா
மாயத்து அடியேனை, அறியாக்காலத்துள் அடிமைக்கண் அன்பு செய்வித்து வைத்தாய்,’ என்க.
(3)
136
எனதுஆவி யுள்புகுந்த
பெருநல் உதவிக்கைம்மாறு
எனதாவி தந்தொழிந்தேன்
இனிமீள்வது என்பது உண்டே?
எனதாவி ஆவியும் நீ,
பொழில்ஏழும் உண்டஎந்தாய்!
எனதுஆவி யார்? யான்
ஆர்? தந்தநீகொண் டாக்கினையே.3
பொ
- ரை :
‘எழுவகைப்பட்ட உலகங்களையும் பிரளயதகாலத்தில் திருவயிற்றில்
வைத்துப் பாதுகாத்த என் சுவாமியே! என் உயிருக்குள்வந்து ஒரு நீராகக் கலந்த பெரிய நல்ல உதவிக்குப்
பதில் உதவியாக என் உயிரை உனக்கே உரியதாகத் தந்தேன்; தந்த பின்னர், உன்னிடத்தினின்றும்
மீள்வது என்பது உளதோ? ‘இன்று,’ என்றபடி, என்
_____________________________________________________________
1. திருவாய் 3. 8 : 9.
2. ‘கண்ட திறத்திது கைதவம்
ஐய!
கொண்டல் நிறக்குறள் என்பது
கொள்ளேல்!
அண்டமும் முற்றும் அகண்டமும்
மேனாள்
உண்டவனாம்;
இது உணர்ந்துகொள்,’ என்றான். என்றார் கம்பநாடர்.
3. ‘கொண்டாய்க்கிளியே’ எனவும் பாடம்.
|