முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

1மயங

70

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

1மயங்கிக்கிடக்கிற காலத்தில் சமர்ப்பிக்கவும் வேண்டும்; தெளிந்ததால், ‘கொடுத்தோம்’ என்று இருக்கக்கடவன் அல்லன். 2‘தேவரீருடைய திருவடித்தாமரைகளில் எனதுஉயிரை இப்போது நான் சமர்ப்பித்தேன்,’ என்றும், 3‘என்னுடையதும் யானும் ஆகிய எல்லாப் பொருள்களும் தேவரீர் உடைமை அன்றோ? இதனை நன்கு அறிந்த யான் தேவரீருக்கு என்னுடைய பொருள் என்று எதனைக் கொடுப்பேன்?’ என்றும் வருகின்ற ஸ்ரீ ஆளவந்தார் திருவாக்குகளை ஈண்டு உணர்தல் தகும்.

    பொழில் ஏழும் உண்ட எந்தாய் -‘இயல்பாகவே அமைந்த சேஷியாய் இருக்குந்தன்மையைக் கொண்டு சொல்ல வேண்டுமோ? பிரளயாபத்திலே வயிற்றிலே வைத்து நோக்கின அது போதாதோ நீ சேஷி என்கைக்கு?’ இனி, ‘பிரளயாபத்திலே நசியாதபடி உலகத்தைப் பாதுகாத்தது போன்று, பிரிந்து நசியாதபடி என்னோடே கலந்து அடிமை கொண்டவன்’ என்பார், ‘பொழில் ஏழும் உண்ட எந்தாய்’ என்கிறார் எனலுமாம்.

    எனது ஆவி யார் யான் ஆர்  - ‘கொடுக்கப்படுகின்ற பொருள் யாருடையது கொடுக்கின்றவன் யாருடையவன்? ஆதலால், நான் என் ஆத்துமாவை உன்னிடத்தில் சேர்த்தேன் என்னத் தக்கவனோ? அல்லன்,’ என்றபடி. தந்த நீ கொண்டாக்கினையே - ஆதியில் இதனை உண்டாக்கின நீயே கொண்டாய் ஆனாய். ‘ஆயின் நித்தியமான ஆத்துமாக்களை ‘உண்டாக்கினை’ என்ற என்?’ என்னில், 4‘தேவரீருடைய நித்தியமான இச்சையினாலேயே, எல்லாப் பொருள்களினுடையவும் உளதாந்தன்மை’ என்கிறபடியே, இவ்வாத்துமாக்கள் நித்தியமாக இருத்தல், இறைவனுடைய நித்தியமான இச்சையினாலோயாம்.

(4)

_____________________________________________________________

1. ’மயங்கிக் கிடக்கும் காலம்’ என்றது, ஒருவன் கேவலம் சேஷத்வ ஞானமாத்திரம்
  உடையவனாய் இருக்கும் நிலையினைக் குறித்தது. ‘தெளிந்தால்’ என்றது, அத்தியந்த
  பாரதந்திரிய அநுசந்தானத்தையுடையவனாய் இருத்தலைக் குறித்தது. 

2. ஸ்தோத்திர ரத்நம், 52.

3. ஸ்தோத்திர ரத்நம், 53.

4. ஸ்ரீவைகுண்ட ஸ்தவம், 36.