முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

1அத

72

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

1அதாவது துரியோதனனால் அளவிட்டு அறிதல், 2இராவணனாலே எடுக்கலாய் இருத்தல் செய்ய அரிதாய் இருக்கை. கனிவார் வீட்டு இன்பமே - நீ என்றால் உள்கனிந்து பக்குவமாய் இருக்குமவர்களுக்கு மோக்ஷசுகம் ஆனவனே! அன்றி, ‘நீ என்றால் இனியராய் இருக்குமவர்கள் இருப்பிடத்திலே வந்து அவர்களுக்கு ஆனந்தத்தை விளைவிக்குமவனே!’ என்று கோடலுமாம்.  ‘அப்படி எங்கே கண்டோம்?’ என்னில், யசோதைப்பிராட்டி, 3தொல்லை இன்பத்து இறுதி கண்டாள் அன்றோ? என் கடல் படா அமுதே - பகை, பத்தி என்ற இவ்விரண்டின் எல்லையிலே உள்ள இரு திறத்தாரிலும் எண்ண ஒண்ணாதபடி இருக்கிற எனக்கு, முயற்சி இன்றிக் கிடைத்த அமுதம் போன்றவனே தனியேன் வாழ் முதலே - தனியேனான என்னுடைய அனுபவத்துக்குப் பிரதம சுக்ருதம் ஆனவனே! பிராட்டி ஒற்றைக் கண்ணள், ஒற்றைக் காதள் முதலியவர்கள் நடுவே இருந்தாற் போன்று, இவரும் இவ்வுலக மக்களின் நடுவே இருந்தாராயினும், அவர்களோடு ஒட்டு இன்றி இருத்தலின், 4தனியேன்’ என்கிறார்.

    பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய் நுனியார் கோட்டில் வைத்தாய் - தனக்கு ஒத்தது வேறு ஒன்று இல்லாததான மஹாவராகத்தின்

_____________________________________________________________

1. ‘ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய்’ என்றதனால், உடல் வலிமையாலும் எடுக்கல்
  எழாத எந்தாய் என்பதனை உபலக்ஷணத்ததாற் கொள்க. ‘எடுக்க எழுதலை’ அறிவிற்கும்
  உடலின் உறுப்புகட்கும் ஏற்பக் கொள்க.

2. முதற்பத்து, மூன்றாந்திருவாய்மொழி, பக். 85. குறிப்பைப் பார்க்க.

3. ‘முழுதும் வெண்ணெய் அளைந்துதொட் டுண்ணும்
  முகிழ்இ ளஞ்சிறுத் தாமரைக் கையும்
  எழில்கொள் தாம்புகொண்டு அடிப்பதற்கு எள்கும்
  நிலையும் வெண்தயிர் தோய்ந்தசெவ் வாயும்
  அழுகை யும்அஞ்சி நோக்கும்அந் நோக்கும்
  அணிகொள் செஞ்சிறு வாய்நெளிப் பதுவும்
  தொழுகை யும்இவை கண்டஅ சோதை
  தொல்லை இன்பத்து இறுதிகண் டாளே.1

(பெருமாள் திருமொழி)

4. ‘பந்துக்கள் நடுவே இருக்கிறவர் ‘தனியேன்’ என்கிறாரிறே; வழிப்பறிக்காரர் நடுவே
  நின்றால் அவர்கள் துணையாகாரிறே; எனக்கு என்றிருப்பார் நடுவே இருக்கியிறே
  இவர்க்குத் தனிமை. தம்மை அத்தலைக்கு ஆக்கிவைக்கையிறே இவர்க்கு வாழ்வு,’
  என்பது இருபத்து நாலாயிரப்படி வியாக்கியானம்.