முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

மூன்றாந்திருவாய்மொழி - பா. 6

73

வடிவை மேற்கொண்டு, பிரளயம்கொண்ட உலகங்கள் ஏழனையும் எடுத்து கூர்மை மிக்க கோட்டில் வைத்தைவனே! இதனால், தனிமையில் வந்து உதவினபடியையும், பாதுகாக்கப் படுகின்ற பொருள்களின் அளவு அல்லாத பாதுகாக்கின்றவனுடைய பாரிப்பையும் அருளிச்செய்தபடி இனி நுன பாதம் சேர்ந்ததேனே - பிரளயம் கொண்ட பூமியை எடுத்தது போன்று, பிறவிப் பெருங்கடலால் கொள்ளப்பட்ட என்னை எடுத்த போதே தேவர் திருவடிகளை நான் கிட்டினேனே அன்றோ?’ அன்றி, 1‘இமையோர் தலைவா ‘இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்னும்படி, அறிவைத் தந்த போதே உன் திருவடிகளைப் பெற்றேனே அன்றோ?’ என்று பொருள் கோடலுமாம்.

(5)

138

        சேர்ந்தார் தீவினைகட்கு அருநஞ்சைத் திண்மதியைத்
        தீர்ந்தார் தம்மனத்துப் பிரியாது அவர்உயிரைச்
        சோர்ந்தே புகல்கொடாச் சுடரை அரக்கியைமூக்கு
        ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதன்முன்னமே.

    பொரை : ‘தன்னை அடைத்தவர்களுடைய தீவினைகட்குக் கொடிய விஷமாய் இருப்பவனும், அவ்வடியவர்கட்குத் தன்னாலும் அசைக்க ஒண்ணாத அறிவினைக் கொடுக்குமவனும், தன்னை ஒழியச் செல்லாதவர்களுடைய மனத்தினின்றும் பிரியாமல் அங்கே தங்கியிருந்து அவர்களுடைய உயிரைச் சிற்றின்பங்களால் சோர்ந்து போகும்படி விடாத ஒளியுருவை உடையவனும், சூர்ப்பணகையினுடைய மூக்கினை அறுத்தவனும் ஆன உன்னை, உனக்கு அடியவனான நான் இவ்வுயிர் உள்ள அன்றே அடைந்தேன் அன்றோ?’ என்கிறார்.

    வி - கு : தீர்ந்தாய் - எல்லாப் பொருள்களின் ஆசையினின்றும் நீங்கினவர்கள்; அதாவது, அவ்விறைவனை ஒழியச் செல்லாதவர்கள் என்றபடி. தீர்த்தல்- விடுதல். ‘தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட்டாகும்’ என்பது தொல்காப்பியம். ( சொல். 318 ), சோர்தல் - ஐம்புலன்களால் தளர்ச்சியினை அடைதல், அல்லது, இறைவனை விட்டுப் பிரிந்து தளர்தல் எனலுமாம். ‘ஈர்ந்தாயை’ என்பது உருபு ஏற்ற முன்னிலைப்

____________________________________________________________

1. திருவிருத்தம், 1.