முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

New Page 1

74

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

பெயர் முன்னமே என்பதிலுள்ள ஏகாரத்தை ‘அடைந்தேன்’ என்பதனுடனும் கூட்டுக. இவ்வேகாரம், தேற்றத்தின் கண் வந்தது.

    ஈடு : ஆறாம் பாட்டு. ‘இனி நுன பாதம் சேர்ந்தேனே’ என்றார். மேல் திருப்பாசுரத்தில்; ‘இனி என்று தான் விசேடிக்கு வேண்டுமோ? ‘பொய்ந்நின்ற ஞானத்திலே’ நீ விசேஷ கடாக்ஷம் பண்ணின போதே கிட்டிற்றிலேனோ?’ என்கிறார் இப்பாசுரத்தில், அன்றி, சொரூபத்தை அநுசந்தித்தவாறே, நிலை நின்ற சொரூபம் இயல்பாகவே அமைந்துள்ளதான சேஷத்துவமேயாய், நடுவுள்ளது வந்தேறியாய்த் தோன்றுகையாலே அருளிச்செய்கிறார் எனலுமாம்.

    சேர்ந்தார் - 1‘இரண்டு துண்டுகளாக வெட்டுப்படக்கடவேன்; அப்படி வெட்டுப்பட்ட போதிலும் ஒருவனுக்கு வணங்கமாட்டேன்’ என்னும் நிர்ப்பந்தம் இல்லாதவர்கள்; ‘இவர்களைச் ‘சேர்ந்தார்’ என்கிறது என்?’ எனில், அநாதி காலம் பிறவிகளால் உழன்று திரிந்த ஆத்துமா சர்வேஸ்வரனைக் கிட்டுகையாவது கெடு மரக்கலம் கரை சேர்ந்தது போன்று இருத்தலின், ‘சேர்ந்தார்’ என்கிறார்; இவர்கள் 2இக்கரை ஏறினவர்கள் அன்றோ? தீவினைகட்கு அரு நஞ்சை - இவர்கள் பேற்றினை அடைவதற்குத் தடையாக உள்ள கர்மங்கட்குக் 3காற்ற ஒண்ணாத நஞ்சானவனை. திண்மதியை - முன்பே சேர்ந்திருக்குமவர்கட்குத் திண்ணியதான மதியைக் கொடுக்குமவனை, அதாவது, 4அம்பரீடன் தவம் செய்துகொண்டிருக்க, சர்வேஸ்வரன் இந்திரன் வேடத்தைத் தரித்துக்கொண்டு சென்று, 5‘உனக்கு வேண்டியவற்றை வேண்டிக்கொள்’ என்ன,

_____________________________________________________________

1. ஸ்ரீராமா. யுத். 36 : 11.

2. ‘அக்கரை என்னும் அனத்தக் கடலுள் அழுந்திஉன் பேரருளால்
  இக்கரை ஏறி இளைத்திருந்தேனை அஞ்சல் என்று கைகவியாய்’

  என்பது பெரியாழ்வார் திருமொழி.

  “புன்பிறப்பாம்    
  எக்கரை நீக்கிப் படித்தாரை அந்த இருவிரசைக்கு
  அக்கரை சேர்க்கும் மணவாள தாசன் அருங்கவியே”

  என்னும்  பகுதி ஈண்டு ஒப்பு நோக்கத் தகும்.

3. காற்றவொண்ணாத - வேறு மருந்தைக் கொடுத்துக் காக்க வொண்ணாத.

4. ஈண்டுச் சரபங்கர் வரலாறு ஒப்பு நோக்குக (கம்பரா. சரபங்கர் பிறப்பு நீங்கு படலம்). 

5. விஷ்ணு தர்மம்.