New Page 1
மூன்றாந்திருவாய்மொழி - பா. 6 |
75 |
‘நான் உன்னை ஆராதிக்குமவன்
அல்லேன்காண்; என்னைச் சமாதி பங்கம் பண்ணாதே போகவல்லையே! உன்னைக் கும்பிடுகிறேன்’ என்றான்.
ஆக, இறைவன் தானே அழிக்கப் பார்க்கும் அன்றும் அழிக்க ஒண்ணாதபடியான திண்ணிய மதியைக்
கொடுக்குமவன் என்பதாம்.
தீர்ந்தார்தம்
மனத்துப் பிரியாது அவர் உயிரைச் சோர்ந்தே புகல் கொடாச் சுடரை 1‘ஸ்ரீராமரே! உம்மால்
நீக்கப்பட்ட பிராட்டி உயிர் வாழாள்; நானும் உயிர் வாழேன்: ஒருவாறு பிழைத்தோமானால், தண்ணீரினின்றும்
மேலே எடுக்கப்பட்ட மீன் போன்று, ஒரு கணநேரமே பிழைத்திருப்போம்’ என்கிறபடியே, தன்னைப்
பிரிய மாட்டாதே இருக்குமவர்கள் நெஞ்சை விட்டுப் போகமாட்டாதே, அவர்கள் உயிர், தன்னைப்
பிரிந்து நீர்ப்பண்டமாக மங்கிப் போகக் கொடாதே, அது தன் பேறு என்னுமிடம் வடிவிலே தோன்ற
இருக்குமவனை. இனி, தீர்ந்தார் -உபாயத்தில் துணிவுடையார்; அவர்கள் ஆகிறார் -2பிராப்பிய
பிராபகங்கள் இரண்டும் அவனே என்று இருக்குமவர்கள்; அவர்கள் தன்னைப் பிரிந்து நோவு படாதபடி
அவர்கள் நெஞ்சிலே இருக்குமவன் என்று கூறலுமாம். அரக்கியை மூக்கு ஈர்ந்தாயை - பிராட்டியினுடைய
சேர்க்கைக்குத் தடையாக நின்ற சூர்ப்பணகையைப் போக்கியது போன்று, அவர்களுடைய விரோதிகளைப்
போக்கும்படியும். ‘ஆயின், மூக்கை அறுத்தவன் ஸ்ரீராமனோ?’ எனில், ஆம்; கையாலே அறுக்க வேண்டுமே?
3‘ஸ்ரீராமபிரானுக்கு இலக்குமணன் வலத்தோள்’ எனப் புகலும் ஸ்ரீராமாயணம்.
அடியேன் அடைந்தேன்
முதல் முன்னமே - ‘அநாதி காலம் இழந்த இழவை மறக்கும்படி வந்து கலக்கையாலே, இன்றோ பெற்றது?
இவ்வாத்துமா உள்ள அன்றே பெற்றேன் அல்லேனோ?’ என்கிறார். இனி, முன்னர்க் கலவியிலே களித்த
தேற்றம் போய் ‘வாயுந் திரை உகளும்’ என்ற திருவாய்மொழியில் கலங்கிப் பிரிவே
_____________________________________________________________
1. ஸ்ரீராமா. அயோத். 31 :
5.
‘நீருள எனின்உள் மீனும்
நீலமும்
பாருள எனின்உள யாவும்;
பார்ப்புறின்
நாருள தனுவுளாய்! நானும்
சீதையும்
யாருளர் எனின்உளேம்? அருளு
வாய்’ என்றான்.
என்ற கம்பராமாயணச் செய்யுள்
ஈண்டு நினைவிற்கு வருகின்றது.
2. பிராப்பியம் - பேறு.
பிராபகம்-அதனையடைதற்குரிய வழி.
3. ஸ்ரீராமா. ஆரண் 34 : 14.
|