முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

76

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

யாகிச் சென்றது போன்று, இங்குக் கலவியின் மிகுதியாலே அத்தை மறந்து, ‘முன்னே பெற்றேன் அல்லேனோ?’ என்கிறார். எனலுமாம். முதன்முன்னம் - பழையதாக என்றபடி.

(6)

139

        முன்னல் யாழ்பயில் நூல்நரம் பின்முதிர் கவையே!
        பன்ன லார்பயி லும்பர னே!பவித் திரனே!
        கன்ன லே!அமு தே!கார் முகிலே!என் கண்ணா!
        நின்ன லால்இலேன் காண்;என்னை நீகுறிக் கொள்ளே.

    பொ - ரை : பழையதாய்ச் சிறந்ததாய் யாழ் விஷயமாகக் கற்கப் படுவதாய் உள்ள யாழ் நூல்களிற் பேசப்படுகின்ற இலக்கணத்தையுடைய நரம்பிலே பிரிந்த முதிர்ந்த சுவை போன்று இனியன் ஆனவனே! சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற நித்தியசூரிகள் அனுபவித்தாலும் முடிவு பெறாத இன்பமயமானவனே! பரிசுத்தத்தையுடையவனே! கரும்பின் ரசம் போன்றவனே! அமுதம் போன்றவனே! கார்முகில் போன்றவனே! என் கண்ணா! உன்னை அல்லாமல் வேறு ஒரு கதியினை யுடையேன் அல்லேன்; ஆதலால், என்னை நீ நினைத்தல் வேண்டும்.

    வி - கு : பன்னலார் - ஒரு சொல். ‘பன் நல்லார்’ எனப் பிரித்தலுமாம். பவித்திரம் - தூய்மை; அதனையுடையவன் பவித்திரன், கன்னல் - கரும்பு, அஃது ஆகுபெயராய் அதன் சாற்றின் கட்டிக்கு ஆயிற்று.

    ஈடு : ஏழாம் பாட்டு. இப்படி, 1தாம் பெற்ற பேற்றின் கனத்தையும் நினைத்தார்; இவ்விஷயத்தினுடைய இனிமையையும் அநு சந்தித்தார்; அநுசந்தித்து, ‘இது இருந்தபடி கண்டோமுக்குத் தொங்காது போலே இருந்தது’ என்று ஐயங்கொண்டு, ‘தேவர் என்னைக் கைவிடில் நான் உளேன் ஆகேன்; என்னைக் கைவிடாது ஒழியவேண்டும்,’ என்கின்றார்.

    முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர்சுவையே - சாஸ்திரத்தினுடைய பழமையதாய், அதுதான் சிறந்ததாய், யாழ் விஷயமாகக்

____________________________________________________________

1. இத்திருவாய்மொழியில் மேலே போந்த பாசுரங்களைக் கடாஷித்துத் ‘தாம் பெற்ற
  பேற்றின் கனத்தையும்’ என்கிறார். இப்பாசுரத்தைக் கடாஷித்து, ‘விஷயத்தினுடைய
  இனிமையையும்’ என்கிறார். கண்டோ முக்கு - கண்ட நமக்கு. தொங்காது - நில்லாது.