முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

80

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

நிற்கின்றீரோ?’ என்ன, எய்தினன் - அடைந்தேன். யான் - இப் பேற்றுக்கு ஒரு முயற்சியும் செய்யாத நான்.

    உறிக்கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் - உறிகளிலே சேமித்துக் கள்ளக்கயிறு உருவி வைத்த வெண்ணெயையும் பாலையும் ‘தெய்வம் கொண்டதோ!’ என்னும்படி மறைந்து அமுது செய்த அச்செயலாலே நாட்டை1 எழுதிக்கொண்டவனுடைய. பின் நெறிக் கொண்ட நெஞ்சனாய் -‘இறைவன் எவ்வெவ் வழியில் செல்லுகின்றான்? இவ்வுயிரும் அவ்வவ்வழியெல்லாம் கூடவே செல்லுகிறது’ என்கிறபடியே,2 அவன் பின்னே நெறிப்பட்ட நெஞ்சையுடையனாய். இதனால், ‘தவம் எய்தினன்’ என்கிற பலத்தைச் சொல்லுகிறாராதல். ‘பின் நெறி’ என்பது, ‘பிரபத்தியை’ எனலுமாம். பின் நெறி - 3பின்னே சொன்னவழி என்றபடி.

    பிறவித் துயர் கடிந்து - பலத்தைக் கூறுகின்ற சரமச் சுலோகத்தில் ‘எல்லாப் பாவங்களினின்றும் உன்னை விடுவிக்கின்றேன்’ என்று தடையின் நீக்கமும் கூறப்பட்டிருத்தலின், இப்பாசுரத்திலும் பலத்தைக் கூறிப் ‘பிறவித்துயர் கடிந்து’ என்று தடையின் நீக்கத்தையும் அருளிச்செய்கிறார். இனி, ‘உறிக்கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் பின் நெறிக்கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித்துயர் கடிந்து’ என்றதனால், பாரதப் போரில் அருச்சுனனுக்குச் சோக நிலையினை உண்டாக்கி, பின்னர் அன்றோ உபாயத்தை உபதேசித்தது? இவர், வெண்ணெய் களவு காணப்போன இடத்தில் அடி ஒற்றிக் கொண்டு சென்று, அவன் புக்க வீட்டிலே தாமும் புக்கு, 4அவன் வெளி வாராமல் படலைத் திருகி வைத்து, உபாய நெறியினைக் கேட்டு அறிந்து, பின் பிறவித்துயர் கடிந்தார் என்ற தொனிப்பொருளும் தோன்றும்.         

(8)

_____________________________________________________________

1. எழுதிக் கொண்ட - அடிமை கொண்ட.

2. ‘அவன் பின்னே நெறிப்பட்ட நெஞ்சையுடையனாய்’ என்றது, கைங்கரியத்திலே
  ஒருப்பட்ட நெஞ்சையுடையனாய் என்றபடி.

3. ‘பின்னே சொன்ன வழி’ என்றது, பின்பு சொன்ன சரமஸ்லோகத்திற்கூறிய உபாயத்திலே
  ஒருப்பட்ட நெஞ்சையுடையனாய்’ என்றது, கைங்கரியத்திலே ஒருப்பட்ட
  நெஞ்சையுடையனாய் என்றபடி.. கர்மம் ஞானம் பத்தி பிரபத்தி என்ற நான்கனுள்
  பிரபத்தி ஈற்றிற் சொல்லப்பட்டதாதலின், ‘பின் நெறி’ எனப்பட்டது. 

4. இங்குத் ததிபாண்டன் சரிதம் நினைவு கூர்வது.