1 4 1
மூன்றாந்திருவாய்மொழி - பா. 9 |
81 |
141
கடிவார்தண் ணந்துழாய்க்
கண்ணன்விண் ணவர்பெருமான்
படிவானம் இறந்த
பரமன் பவித்திரன்சீர்ச்
செடியார் நோய்கள்கெடப்
படிந்து குடைந்துஆடி
அடியேன் வாய்மடுத்துப்
பருகிக் களித்தேனே.
பொ - ரை :
வாசனை மிகுந்துள்ள குளிர்ந்த அழகிய திருத்துழாயினை அணிந்த கண்ணபிரானும், நித்தியசூரிகட்குத்
தலைவனும், பரமபதத்திலும் தன் திருமேனிக்கு ஒப்பான பொருள் இல்லாதபடி இருக்கிற மேலானவனும்,
பரிசுத்தத்தைக் கொடுக்குமவனும் ஆன இறைவனுடைய நற்குணங்களில், தூறு மண்டிக் கிடக்கிற நோய்கள்
எல்லாம் கெடும்படியாகப் படிந்து குடைந்து ஆடி வாய்மடுத்துப் பருகி அடியேன் களித்தேன்.
வி-கு :
கடி - வாசனை. வார்தல் -ஒழுகுதல்; அதாவது, மிகுதல். படி - திருமேனி. ‘படிமை’ என்னும்
சொல்லின் விகாரம். வானம் - பரமபதம். இறத்தல் - கடத்தல். செடி - தூறு. ‘பவித்திரன் சீரிலே
அடியேன் நோய்கள் கெடும்படியாகப் படிந்து குடைந்து ஆடி அச்சீரை வாய்மடுத்துப் பருகிக் களித்தேன்,’
என முடிக்க. ‘சீரை வாய்மடுத்துப் பருகி’ என்கிறார்; ‘உண்டற்கு உரிய அல்லாப் பொருளை, உண்டன
போலக் கூறலும் மரபே’ என்பது விதி.
ஈடு :
ஒன்பதாம் பாட்டு. 1‘இவ்வுயிரானது முற்றறிவினனான இறைவனுடைய நற்குணங்களை அவ்விறைவனோடு
அனுபவிக்கின்றது’ என்கிறபடியே, தம்முடைய எல்லாத் துக்கங்களும் போகும்படி ‘இறைவனை அனுபவிக்கப்பெற்றேன்’
என்று மகிழ்கிறார்.
கடி வார் தண் அம்
துழாய்க் கண்ணன் - வாசனை மிகுந்துள்ள திருத்துழாய் மாலையினையுடைய கிருஷ்ணன். இனி, ‘கடி
வார்’ என்பதற்குத் ‘தேன் ஒழுகுகின்ற’ என்று பொருள் கூறலுமாம். விண்ணவர் பெருமான் - இவ்வொப்பனை
அழகாலே எழுதிக் கொள்வது 2அனந்தன் வைநதேயன் முதலிய நித்தியசூரிகளை
_____________________________________________________________
1. ஆனந்தவல்லி, 1 : 2.
2. ‘செடியார் நோய்கள் கெட,
சீர் வாய்மடுத்துப் பருகிக் களித்தேன்’ என்ற பதங்களை
நோக்கி அவதாரிகை அருளிச்செய்கிறார்.
3. அளந்தன் - ஆதிசேடன்.
வைநதேயன் -விந்தையின் புத்திரன் (கருடன்), தந்திதாந்த
நாமம்.
|