ய
82 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
யாதலின் ‘துழாய்க் கண்ணன்’
என்றதனை அடுத்து, ‘விண்ணவர் பெருமான்’ என்கிறார். படி வானம் இறந்த பரமன் - எல்லா
வகையாலும் தன்னை ஒத்திருக்கிற பரமபதத்திலுள்ள நித்தியசூரிகளும் தன் தன்மைக்கு ஒப்பாகாதபடி
இருக்கிற பரமன். படி - தன்மை. வானம் இடவாகு பெயர். இனி, ‘தன் திருமேனிக்கு மேகமும் ஒப்பாகாதபடி
இருக்கிற பரமன்’ எனலுமாம். படி - திருமேனி. வானம் மேகம். பவித்திரன்- இவ்வடிவழகைச் சமுசாரிகளும்
அனுபவிக்கைக்குத் தக்கவராம்படி செய்யும் சுத்தியையுடையவன்.
சீர் - அவனுடைய
கல்யாண குணங்களை. செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்து ஆடி அடியேன் வாய்மடுத்துப் பருகிக்
களித்தேனே - அடி காண ஒண்ணாதபடி தூறுமண்டிக் கிடக்கிற தீய வினைகளெல்லாம் போகும்படி வந்து கிட்டி,
நான்கு மூலைகளிலும் புக்கு உட்புகுந்து, வேறு ஒருவர்க்கும் உரியன் அல்லாத யான் முழுமிடறு செய்து
அனுபவதித்து, 1யமன் முதலியோர் தலைகளிலும் அடியிட்டுக் களிக்கப் பெற்றேன்.
சிற்றின்பம் துக்கமே ஆயது போன்று, பகவத் குணானுபவம் களிப்பே ஆதலின், ‘களித்தேனே’
எனத் தேற்றேகாரம் கொடுத்து ஓதுகிறார். படிதல் - கிட்டுதல். குடைதல். எங்கும் புகுதல். ஆடுதல்
- உட்புகுதல். வாய்மடுத்துப் பருகுதல் - பெருவிடாயோடே அனுபவித்தல்.
(9)
142
களிப்பும் கவர்வும்
அற்றுப் பிறப்புப் பிணிமூப்பு இறப்புஅற்று
ஒளிகொண்ட 2சோதியமாய்
உடன்கூடுவது என்றுகொலோ
துளிக்கின்ற வான்இந்நிலம்
சுடர்ஆழி சங்குஏந்தி
அளிக்கின்ற மாயப்பிரான்
அடியார்கள் குழாங்களையே.
பொ - ரை :
நினைத்த பொருள் கிடைக்கப் பெற்றமையால் உளதாகும் களிப்பும், அது கிடைக்கப்பெறாமையால்
உளதாகும் துன்பமும் நீங்கி, இவை இரண்டற்கும் அடியான பிறப்பும், பிறப்புள்ள இடத்தே சென்று
புகுகின்ற நோயும், வேறு ஒன்றால் நீக்க ஒண்ணாத முதுமையும்.
____________________________________________________________
1. ’காவலிற் புலனைவைத்துக்
கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து
நாவல் இட்டு உழிதர்
கின்றோம் நமன் தமர் தலைகள் மீதே
மூவுலகு உண்டுஉ மிழ்ந்த முதல்வ!நின்
நாமம் கற்ற
ஆவலிப்பு உடைமை கண்டாய்
அரங்கமா நகரு ளானே!’
என்றார் தொண்டரடிப்பொடிகள்.
2. ‘சோதியுமாய்’ என்பதும்
பாடம்.
|