முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

New Page 1

மூன்றாந்திருவாய்மொழி - பா. 11

85

143

        குழாங்கொள் பேர்அரக்கன் குலம்வீய முனிந்தவனைக்
        குழாங்கொள் தென்குருகூர்ச் சடகோபன் தெரிந்துஉரைத்த
        குழாங்கொள் ஆயிரத்துள் இவைபத்தும் உடன்பாடிக்
        குழாங்களாய் அடியீர்! உடன் கூடிநின்று ஆடுமினே.

    பொ- ரை : ‘இராக்கதர்களைக் கூட்டம் கூட்டமாக உடையவனும் எல்லாவற்றாலும் பெருமை பெற்றவனும் ஆன இராவணனுடைய குலமானது முற்றும் அழியுமாறு சீற்றங்கொண்ட இறைவன் விஷயமாக, ஸ்ரீவைஷ்ணவர்கள் கூட்டம் கூட்டமாய்த் தங்கியிருக்கிற அழகிய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபர் ஆராய்ந்து அருளிச் செய்த பத்து நூறுகளையுடைய ஆயிரம் பாசுரங்களில், இப்பத்துப் பாசுரங்களையும் அடியவர்களே பொருள் உணர்ச்சியோடே அன்பிற்குப் போக்கு வீடாக வாய் விட்டுப் பாடிக் கூட்டங்கூட்டமாகச் சேர்ந்து நின்று அனுபவியுங்கள்,’ என்றவாறு.

    வி - கு : ‘அடியீர்! குழாங்களாய், இவை பத்தையும் உடன் பாடி உடன் கூடி நின்று ஆடுநின்,’ எனக்கூட்டுக. வீய - வினையெச்சம்; ‘வீ’ என்பது பகுதி; ‘சாக’ என்பது பொருள். முனிந்தவன் -வினையாலணையும் பெயர்.

    ஈடு : முடிவில், ‘இத்திருவாய்மொழியை ‘உனக்கேநாம் ஆட் செய்வோம்’ என்று இருக்கும் அடியவர்கள், 1என்னைப் போன்று தனித்திராமல் திரளாக அனுபவியுங்கள்,’ என்கிறார்.

    குழாம் கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனை - 2’சீதா பிராட்டியின் பொருட்டு, பாணங்களால் இவ்வுலகத்தில் பிசாச சாதி அற்றதாயும், இராக்கத சாதி அற்றதாயும் செய்வேன்’ என்கிற படியே, புத்திரர் பௌத்திரர் முதலானவர்களும் உறவினர்களுமான இவர்களாலே குழாங்கொண்டு வரத்தின் வலிமை தோள் வலிமை என்பனவற்றால் தழைத்து வேர் ஊன்றின இராக்கதனுடைய சாதியினைக் கிழங்கு எடுத்த சக்கரவர்த்தி திருமகனை.

    குழாம் கொள் தென்குருகூர்ச் சடகோபன் - அடியார்கள் கூட்டத்தைக் கொண்ட அழகிய திருக்குருகூரில் அவதரித்த

_____________________________________________________________

1. ‘என்னைப் போன்று தனித்திரமால்’ என்றது, ‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது
  என்றுகொலோ’ என்றதனை நோக்கி. மேலும் ‘தனியேன் வாழ்முதலே’ என்றார்.(2. 3 : 5)

2. ஸ்ரீராமா. ஆரண் 64 : 66