முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

New Page 1

முதல் திருவாய்மொழி - பா. 2

9

யுடைய அன்றிலே!’ எனலுமாம். சேண்பட்ட யாமங்கள் - இரவாய் நீண்டு செல்லாது, இரவின் கூறாகிய ஒவ்வொரு யாமமும் நீண்டு செல்லுகின்றது என்பாள், ‘சேட்பட்ட யாமங்கள்’ என்கிறாள். சேராது இரங்குதி -‘நெடுகுகிற யாமங்களில் படுக்கையிற்சேரா தொழியினும் தரித்திருக்கலாம்; அங்ஙனமும் செய்யாது வருந்துகிறாய்’என்பாள், ‘இரங்குதி’ என்கிறாள்.

    ஆள்பட்ட எம்மேபோல் நீயும் - ‘நெஞ்சு பறியுண்டு படுக்கையிலுஞ்சேராதே நோவுபடுகைக்கு என்னைப் போலே நீயும் அவன் திருவடிகளில்1 தாஸ்ய பரிமளத்திலே அன்றோ அகப்பட்டது?’ நாட்டாரில் வேறுப்பாட்டையுடையதாகப்2 போந்திருக்கிற நீ’ என்பாள் ‘நீயும்’ என்கிறாள். இனி, 3‘இறைவன் உயிர்கட்கெல்லாம் ஈஸ்வரனாயும், மங்களகரனாயும், உயிர்களைக் கைவிடாதவனாயும் இருக்கிறான்,’ என்றும், ‘இறைவனைச் சேர்ந்தவனாக நான் ஆகின்றேன்,’ என்றும் ஓதினாய் இல்லை; 4மயர்வற மதிநலம் அருள’ப் பெற்றாய் இல்லை; ஆதலால் என்றனை உட்புகாத நீயும் இப்படி ஆவதே!’ என்பாள், ‘நீயும்’ என்றாள் எனலுமாம். அரவணை யான் தாள்பட்ட தண்துழாய் தாமம் காமம் உற்றாயே - மேல் 5திருமாலால்’ என்றாள்; இருவருமானால் இருப்பது படுக்கையிலே யாய் இருக்குமே? ஆதலின், ஈண்டு ‘அரவணையான்’ என்கிறாள். ஆக, ‘அவனும் அவளுமாய்த் துகைத்த திருத்துழாய் மாலை பெறவேண்டும்’ என்று ‘அத்தையோ நீயும் ஆசைப்பட்டாய்?’ என்கிறாள் என்றபடி. சுடர்முடிமேல் துழாய் ஒழிய, ‘அவர்கள் இருவரும் கூடத்துகைத்த துழாய்’ என்பாள், ‘தாள்பட்ட துழாய்’ என்கிறாள். புழுகிலே தோய்த்து எடுத்தாற்போன்று, பரிமளத்திலே தெரியும்6 ‘கலம்பகன் நாறும்; ஆதலின, ‘தண்துழாய்’ என்கிறாள்7 ‘தாளிணை மேல் அணி தண் அம் துழாய்’ என்று அன்றோ தான்

_____________________________________________________________

1. தாஸ்ய பரிமளம் - அடிமை வாசனை.

2. போந்திருக்கிற -சென்று உன் வீட்டில் இருக்கிற என்பது பொருள். ‘பனைமரத்திலிருக்கிற’
  என்பது தொனிப்பொருள். போந்து - பனைமரம்.

3. தைத்திரீய நாராய. 11 : 8.

4. திருவாய். 1. 1 : 1

5. திருமால் - திருமகள் கேள்வன்

6. கலம்பகன் - பல வகைப்பட்ட மலர்கள்.

7. திருவாய். 4. 2 : 1.