இன
நான்காந்திருவாய்மொழி - பா. 1 |
91 |
இனி, ‘வாயுந் திரைகளில்
துன்பம் வந்து கலந்து கலவி முற்றுவதற்கு முன்னே வந்த பிரிவாகையாலும் ஆற்ற ஒண்ணாது; ஆதலால்,
வருந்துகிறார் எனலுமாம்.
144
ஆடிஆடி அகம்க ரைந்து,
இசை
பாடிப்பாடிக் கண்ணீர்மல்
கி,எங்கும்
நாடிநாடி, நரசிங் காஎன்று
வாடி வாடும்இவ் வாள்நுதலே.
பொ - ரை :
ஒளி பொருந்திய நெற்றியினையுடைய இவள், நின்ற இடத்தில் நில்லாமல் பல இடங்களிலும் உலாவி,
மனமும் கரைந்து, இசையோடு பல காலம் பாடிக்கொண்டு, கண்களில் நீர் நிறையப் பெற்று எல்லா
இடங்களிலும் தேடித்தேடி, ‘நரசிங்கனே!’ என்று மிகவும் வாடாநின்றாள்.
வி-கு :
‘வாணுதல், ஆடிக் கரைந்து பாடி மல்கி நாடி நரசிங்கா என்று வாடி வாடும்’ என்க. வாணுதல் - அன்மொழித்தொகை.
‘நரசிங்கா என்று வாடும்’ என்றது, ‘பிரஹ்லாதன் விரும்பிய காலத்தில் நரசிங்கமாய் வந்து தோன்றி,
அவனுக்கு உதவியைச் செய்த பெருமான் எனக்கு உதவுகின்றிலனே!’ என்று இப்பெண் வருந்துகிறாள் என்று
கருத்தை உட்கொண்டு நின்றது.
இத்திருவாய்மொழி முச்சீரடி
நான்காய் வருதலின் வஞ்சி விருத்தம் என்பர்.
ஈடு : முதற்பாட்டு.
1‘ஆபத்தே
செப்பேடாக அடியானான பிரஹ்லாதன் சூளுறவு செய்த அக்கணத்திலே வந்து உதவும் தன்மையானானவனைச்
சொல்லிக் கூப்பிடாநின்றாள்’ என்கிறாள்.
ஆடி - இருத்தல் நடத்தல்
கிடத்தல் முதலியவைகளில் ஒரு நியதி இன்றிப் பிரிவுத் துன்பத்தால் படுகிற பாடு திருத்தாயார்க்கு
மனத்தைக் கவர்வதாக இருத்தலின், ‘ஆடி’ என்கிறாள்.
_____________________________________________________________
1. ‘நரசிங்கா என்று,
வாடி வாடும்’ என்றதனை நோக்கி அவதாரிகை அருளிச்செய்கிறார்.
செப்பேடு - தாமிரசாசனம்.
‘என்னுயிர் நின்னாற்
கோறற் கெளியதுஒன்று அன்று; யான்முன்
சொன்னவன் தொட்ட தொட்ட
இடந்தொறும் தோன்றானாயின்
என்னுயிர் யானே மாய்ப்பல்;
பின்னும்வாழ்வு உகப்ப லென்னின்
அன்னவற்சூ அடியே னல்லேன்!’
என்றனன், அறிவின் மிக்கான்.
என்ற செய்யுளால் (கம்பரா.
இரணியன் வதை. 126) அவன் சூளுறவு அறிதலாகும்.
|