| ஸ்ரீ 
  
    | 
    92 | 
திருவாய்மொழி - 
இரண்டாம் பத்து |  
ஸ்ரீகௌசல்யையார் 
பெருமாளைப் பிரிந்து துடிக்கிற துடிப்பை 1‘ஸ்ரீராமன், தாயை நர்த்தனஞ் செய்கின்றவளைப் 
போன்று பார்த்தான்’ என்கிறார் ஸ்ரீவால்மீகி பகவான். ஆதலால், வடிவழகியார் செய்யும் வியாபாரங்கள் 
எல்லாம் கண்ணுக்கு இனியவாகவே இருக்கும். அன்றியும் பிராட்டி, பிரிந்து அழகு அழிந்திருக்கிற 
சமயத்திலேதான் 2‘மங்கள சொரூபியாய் இருந்தாள்’ என்று ஸ்ரீவால்மீகி கூறுகிறார். 
ஆதலால், அழகியார், என்றும் வடிவழகியாரேயாவர். 
    ஆடி-முதலில் ‘ஆடி’ 
என்றதற்கு அவ்வருகே ஒரு நிலை. இரண்டாம் ஆடி முதலில் ‘ஆடி’ என்றதனோடு அமையாது, இருகால் மட்டு
‘ஆடி’ என்கிறாள்; துன்பத்தின் மிகுதியைத் 3தாளங் கொண்டு அறியுமித்தனை. 
முதலிலே சஞ்சாரம் அரிதாய் இருக்கவும் ஆற்றாமையால் தூண்டப்பட்டுச் சஞ்சரிக்கிறாள்; ‘என்? 
முடிந்தாலோ?’ எனின், 4குணாதிக விஷயம் ஆகையாலே முடிந்து பிழைக்கவும் ஒட்டாது;
5‘ஸ்ரீ பரதாழ்வான் இன்னம் ஒருகால் அவ்வாராம பிரானுடைய முகத்தில் விழ்க்கலாமாகில், 
அருமந்த பிராணனைப் பாழே போக்குகிறது என்?’ என்று இராச்சியத்தையும் தொட்டுக் கொண்டு கிடந்தான் 
அன்றோ? அகம் கரைந்து -‘மனம் என்னும் பொருள் நீராய் உருகிப்போயிற்று’ என்கிறாள். ஆற்றாமை 
தூண்டச் சஞ்சரித்தவள், சஞ்சாரம் அடி அற்று இருக்கின்றாள் என்பாள், ‘அகம் கரைந்து’ 
என்கிறாள். ‘ஆயின், மனம் கரைந்ததை இவள் அறிந்தவாறு யாங்ஙனம்?’ எனின், இவள் வியாபாரம் 
கண்ணுக்கு இலக்கானாற்போலே, அகவாயும் இவள் நெஞ்சுக்கு இலக்காய் இருக்கிறபடி. இசை பாடிப் பாடி 
- ‘மனம் முன்னர் நினைக்க, பின்னர் வார்த்தை உண்டாகும்’ என்கிற நியதி இல்லை; ஆற்றாமையாலே 
கூப்பிடுகிற கூப்பீடுதான் பாட்டாய்த் தலைக்கட்டுகிறதிததனை. ‘ஆயின், கூப்பீட்டைப் பாட்டு என்னலாமோ?’ 
எனின், ஆற்றாமை 
_____________________________________________________________ 
1. 
ஸ்ரீராமா. அயோத். 40 : 25. 
2. 
ஸ்ரீராமா. சுந். 29 : 1 . 
3. ‘தாளங்கொண்டு அறியுமித்தனை’ 
என்றது, வெண்கலத்தின் ஒலி போன்று ஒரு காலுக்குஒருகால் ஓய்ந்து வருகிறது என்றபடி.
 
4. ‘விலக்ஷண விஷயத்தைப் 
பிரிந்தால் முடிகையும் அரிது, ஜீவிக்கையும் அரிது;வைலஷண்யம் ஜீவிக்கவொட்டாது, நசை முடியவொட்டாது’ 
என்பது இருபத்து நாலாயிரம்.
 
5. ஸ்ரீராமா. பால. 1 : 
38. |