| இ 
  
    | 
    94 | 
திருவாய்மொழி - 
இரண்டாம் பத்து |  
இருக்கச் செய்தேயும், 
வாராத் திருநாமம் செவிப்பட்டவாறே 1‘விலங்கப் பார்ப்பது, மேலே பார்ப்பது, 
கீழே பார்ப்பது ஆனாள்’ என்றார் ஸ்ரீவால்மீகி. ‘ஆயின், வருவதற்கு உரித்து அல்லாத திக்கிலும் 
தேடுவான் என்?’ என்னில், சம்பாவனை இல்லாத திக்கிலும் வந்து தோற்றுமவன் ஆகையாலே, தேடுகிறாள். 
‘ஆயின், பரத்துவம் முதலிய நிலைகளை விட்டு, இவர் அவதாரத்தையே பேசுவான் என்?’ எனில், 
2‘பத்துடை அடியவர்க்குப் பின்பு அவதாரத்துக்கு அவ்வருகு இவர் போகமாட்டார். இனி, 
‘எங்கும் நாடி நாடி’ என்பதற்கு, தன் கொய்சகம் உட்படப் பாராநின்றாள்’ என்று பட்டர் 
அருளிச்செய்வர். ‘அதற்குக் கருத்து என்?’ என்னில், 3‘கண்ணன் என் ஒக்கலையானே’ 
என்கிறபடியே, அவன் இருந்த இடமாகையாலே. நரசிங்கா என்று வாடி வாடும் - பிரஹ்லாதனைப் போலே, 
ஒரு 4தம்பம் இல்லாதபடி இருக்கையாலே கொம்பை இழந்த தளிர் போலே வாடும். ‘முதல் 
வாட்டம் - தளிர்’ என்று கூறத் தக்கவாறு இருக்கிறது, அடுத்த கணத்தில் வாட்டம் என்பாள், 
‘வாடி வாடும்’ என்கிறாள். 
    5‘என்னிடமிருந்து 
எல்லாப் பொருள்களும் உண்டாகின்றன; எல்லாம் என்னிடத்தில் லயம் அடைகின்றன; எல்லாப் 
பொருள் 
_____________________________________________________________ 
1. ஸ்ரீராமா. சுந். 31 : 
119. இச்சுலோகத்திற்கு வியாக்கியாதா அருளிச் செய்த பொருள்மேலும் வருமாறு: ‘கீழே பார்த்ததற்குக் 
கருத்து என்?’ என்னில், பூமியைப் பிளந்து
 கொண்டு புறப்பட்டு ஒருவன் திருநாமம் சொல்லச் சம்பாவனையுண்டாகில், 
அல்லாத
 திக்கிலும் உள்ளது என்று பார்த்தாள்; அன்றிக்கே, ‘மாஸோபவாசிகள், ‘சோறு’
 என்றவாறே 
அலமாக்குமா போலே பார்த்தாள்,’ என்னுதல்; அங்ஙனன்றிக்கே, ‘சிம்சுபா
 விருக்ஷத்தை எங்கும் ஒக்கப் 
பார்த்தாள்’ என்னுதல். யூம சிந்த்ய புத்தம் ததர்ஸ் - அவன்
 வடிவு காண்பதற்கு முன்னே அகவாயையாயிற்றுப் 
பரிசோதித்தது; ‘இந்நிலத்திலே புகுந்து
 இடங்கொண்டு நாம் இருந்த இடந்துருவி நிலை குத்த வல்ல 
நெஞ்சையுடைய
 வனன்றோ?’ என்று. பிங்காதிபதேரமாத்யம் - ‘இவன் ஸ்வதந்த்ரல்லன்; இராஜ கார்யம்
 இவன் கையிலே உண்டு’ என்று அறிந்தாள். வாதாத்மஜம் - பெருமாளுக்குப்
 பிராணஹேதுவான பிராட்டிக்குப் 
பிராணனைக் கொடுக்கையாலே ‘இவன் சர்வர்க்கும்
 பிராணஹேதுவானு வாயுபுத்திரன்’ என்று தோன்ற 
இருந்தான். சூர்யமிவோதயஸ்த்தம் -
 இலங்கையிலும் கிழக்கு வெளுக்க அடியிட்டது. பெருமாளாகிற ஆதித்திய 
உதயத்துக்கு
 அருணோதயம் என்னலாம்படி இருந்தான்; ஆகையிறே, இலங்கை நாலுமதிளுக்கு நடுவு
 ‘ஹரி ஹரி’ 
என்கிறபடியே இருக்கிறது.’
 
2. திருவாய். 1. 3 : 1. 
3. திருவாய். 1. 9 : 4. 
4. தம்பம், சிலேடை; 
‘தூண், ஆதாரம்’ என்பன பொருள். ‘தம்பம் இல்லாமையாலே’என்றது, தம்பத்தில் தோன்றியது 
போன்று, இங்குத் தோன்றாமையாலே என்றபடி.
 
5. ஸ்ரீவிஷ்ணு புரா. 1. 19 
: 85. |