| களும 
  
    | 
நான்காந்திருவாய்மொழி - பா. 1 | 
    95 |  
களும் நானாகவே 
இருக்கிறேன்’ என்னும் தெளிவுடையவனுக்குத் தோன்றினவன், கலங்கின 1அபலைக்குத் தோன்றானோ!’ 
என்று வாடுகிறாள் என்கிறாள் என்றபடி. ‘நரசிங்கா என்று வாடும்’ என்ற தொடரில், ‘தமப்பன் 
பகையானாலோ உதவுவது?’ நீர் பகையானால் உதவலாகாதோ? ஞான நிஷ்டர்க்கோ உதவலாவது? பக்தி நிஷ்டர்க்கு 
உதவலாகாதோ? ஆண்களுக்கோ உதவலாவது? ஆண்களுக்கோ உதவலாவது? பெண்களுக்கு உதவலாகாதோ? 2சேராத 
வடிவு சேர்த்து உதவிலோ உதவலாவது? இருந்தபடியே உதவலாவார்க்கு உதவலாகாதோ? 3ஓர் 
அதிகாரி நியதி, ஒரு கால நியதி, ஒரு அங்க நியதி என்கிற நிர்பந்தம் வேண்டுமோ இவளுக்கு? 
இவளுடைய ரக்ஷணத்திற்கு 4ஏதேனும் முகம்பண்ண வேண்டுமா?’ என்ற தொனிப் பொருளும் தோன்றும்.
5‘தர்மி லோபம் பிறந்தது இல்லை,’ என்பாள், ‘வாடும்’ என நிகழ்காலத்தாற் 
கூறுகிறாள். ‘வரும்’ என்னும் நசையாலே முடியப் பெறுகின்றிலன் என்பதாம். 
    இவ்வாணுதலே - ஒளியுடன் 
கூடின நுதலையுடைய இவள். ‘இவ்வழகுக்கு இலக்கானார் படுமதனை இவள் படுவதே!’ என்பாள், ‘வாடும் 
இவ்வாணுதல்’ என்கிறாள். ‘இவள் முடிந்தால் 6‘பிரமன் முன் காலத்தில் இருந்தபடியே 
படைத்தான்’ என்பது போன்று, உம்முடைய மேன்மையாலே ‘இன்னம் இப்படிப்பட்டது ஒரு வடிவத்தை உண்டாக்கலாம்’ 
என்று இருக்கிறீரோ?’ என்பது திருத்தாயாருடைய உடகோள். ‘நன்று; இந்நிலையில்  இவளை ‘வாணுதல்’ 
என்னக் கூடுமோ?’ என்னில், 7‘ஊனில் வாழுயிரில்’ கலவியால் உண்டான புகர் இன்னம் 
அழிந்தது இல்லை ஆதலின், கூறுகிறாள். அம்பு பட்டு முடிந்தாரையும் நீரிலே புக்கு முடிந்தாரையும் முகத்திலே 
அறியலாமாதலின், குணாதிக விஷய விரஹத்தாலே வந்த இழவு என்னுமிடம்  முகத்தின் எழிலிலே தெரியாநின்றது 
என்றபடி.                                            ( 1 ) 
_____________________________________________________________ 
1. 
அபலை - பலமற்றவள். 
2. சேராத வடிவு  - 
மனித வடிவும் விலங்கு வடிவும். 
3. அதிகாரி - பிரஹ்லாதன். 
காலம் - அந்திக் காலம். அங்கம் - நர வடிவும் சிங்க வடிவும்கலந்த வடிவம்.
 
4. ‘அவனைக் காத்தற்குச் 
சிங்கத்தின் முகத்தை அடைந்தது போன்று, இவளைக் காத்தற்குவேறு முகம் கொள்ள வேண்டா’ என்றபடி.
 
5. தர்மத்தையுடையது தர்மி; 
இங்கு உயிர். 
6. தைத்திரீய நாராயண் 
உபநிடதம். 
7. திருவாய். 2. 3 : 1. |