1 4 5
96 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
145
வாணுதல்இம்
மடவரல் உம்மைக்
காணும்ஆசையுள்
நைகின் றாள்;விறல்
வாணன்ஆயிரம்
தோள்துணித் தீர்!உம்மைக்
காண, நீர்இரக் கம்இலீரே.
பொ - ரை :
வெற்றி பொருந்திய வாணாசுரனுடைய ஆயிரம் தோள்களையும் துணித்தவரே! ஒளி பொருந்திய நெற்றியினை
உடையளாய் மேன்மேலும் வளர்கின்ற மடப்பத்தினை உடையளாய் உள்ள இப்பெண், உம்மைக் காண வேண்டும்
என்னுள் ஆசையுள் அகப்பட்டு வருந்துகிறாள்; உம்மைக் காணுமாறு நீர் இரங்குகின்றீர் இலீர்.
வி-கு :
நைதல் - வருந்துதல் ‘வாணன் ஆயிரம் தோள் துணித்தீர்!’ என்ற விளி வாணனுடைய ஆயிரம் தோள்களையும்
துணித்து உஷையோடு அநிருத்தனைச் சேர்த்து வைத்தீர்; இப்பொழுது இப்பெண்ணின் திறத்து இரங்காது
இருப்பது என்னோ!’ என்ற கருத்தை உட்கொண்டது.
ஈடு :
இரண்டாம் பாட்டு. ‘நம்மைக் காணுதற்குத் தடையாக உள்ள விரோதிகள் பல உங்களிடத்தில்
இருந்துகொண்டு இருக்க, நடுவே வாடும் இத்தனையேயோ வேண்டுவது?’ என்ன ‘வாணனுடைய தோள்கள் ஆயிரத்திலும்,
இவள் விரோதி பிரபலமோ?’ என்கிறாள்.
வாணுதல் இம்மடவரல்
நைகின்றாள் நீர் இரக்கம் இலீர் இவ்வவயவ சோபை போகத்திற்குக் காரணமாதல் அன்றி நைகைக்கு
உறுப்பாவதே! ஐனக மஹாராஜன் பிராட்டியினுடைய பேரழிகினை நினைந்து, 1‘இச்சீதை’
என்று சுட்டிக் கூறியது போன்று, பெற்ற தாயாகிய இவளும் பெண்ணின் பேரழகினை நினைந்து ‘இம்மடவரல்’
என்கிறாள். ‘பெற்ற எனக்கு 2ஆகர்ஷகத்திற்குக் காரணமான இது, கைப்பிடித்த உமக்கு
உபேஷைக்குக் காரணம் ஆவதே!’ என்பாள், ‘நீர் இரக்கம் இலீர்’என்கிறாள். மடவரல் -
மடப்பம்
_____________________________________________________________
1.
ஸ்ரீராமா. பால. 73 : 24.
2. ஆகர்ஷகம் - மனக்கவர்ச்சி.
இவ்விடத்தில்,
‘கஞ்சத்துக்
களிக்கும் இன்தேன் கவர்ந்துணும் வண்டு போல
அஞ்சொற்கள் கிள்ளைக்கெல்லாம்
அருளினான் அழகை மாந்தித்
தஞ்சொற்கள் குழறித் தத்தம்
தகைதடு மாறி நின்றார்;
மஞ்சர்க்கும் மாதரார்க்கும்
மனம்என்பது ஒன்றே யன்றோ?’
என்ற செய்யுள் (கம்பரா.
பால. கோலங். 19) ஒப்பு நோக்குத்தகும்.
|