| வந 
  
    | 
நான்காந்திருவாய்மொழி - பா. 2 | 
    97 |  
வந்திருக்கை; அதாவது, 
மென்மையையுடையவள் ஆகுகை. பிரிந்து கலக்கப் பொறாத சௌகுமார்யத்தையுடையவள் என்றபடி. ஆக, 
பிராட்டி நிலையைக் கண்ட திருவடியைப் போலே இருக்கிறது காணும், இப்பெண்பிள்ளை நிலையைக்கண்ட 
திருத்தாயார்க்கு; 1‘இவளைப் பிரிந்து சமாதானம் பண்ணியிருந்த பெருமாள் சால அரிதாகச் 
செய்தார், இவளைப் பிரிந்து  தேகத்தைத் தரித்திருந்தார் என்பது யாது ஒன்று, அதனைச் சாலஅரிதாகச் 
செய்தார்; 2யானை ஏறவும் குதிரை ஏறவும் நாடு ஆளவும் கற்றாரித்தனை; பிரணய தாரையில் 
புதியது உண்டிலர்,’ என்பது திருவடி வார்த்தை. மால்ய வானில் பெருமாள் இருந்த போது கார் காலத்திலே 
பட்ட பாட்டைக் கண்டு, ‘வசிஷ்ட சிஷ்யன், ஒரு பெண் நிமித்தமாக இப்படிப் படுவதே!’ என்று பழித்துச் 
சிரித்திருந்தான் விரக்தன் ஆகையாலே; இப்போது ‘இவளைப் பிரிந்து தேகத்தைத் தரித்துக் கொண்டிருப்பதே!’ 
என்கிறான் விசேஷஜ்ஞன் ஆகையாலே. ‘இது ஏதேனும் 3இரவல் உடம்போ சுமந்து கொண்டு 
இருக்கைக்கு? இன்பத்திற்கு நிலைக்களம் அன்றோ? துக்கத்துக்கு நிலைக்களமோ இது? பிரிந்தால் 
கிரமத்திலே கூடுகிறோம் என்று தரித்திருக்க வல்லள் அல்லளே?’ என்கிறாள் என்றபடி. 
    உம்மை - இவள்படியன்றோ 
உமக்கு உபதேசிக்க வேண்டுவது; உம்மை நீர் அறியாமை இல்லையே; ‘நம்மைப் பிரிந்தார்கள் பிழையார்கள்’ 
என்று இருக்க வேண்டாவோ?’ வாணுதல் இம்மடவரல் உம்மை - 4‘சக்கரவர்த்தி திருமகனுக்குத் 
தகுந்த சீலம், வயது, ஒழுக்கம், ஒத்த குலம், இராஜ இலக்கணம் இவற்றையுடையளாய் இருக்கிற பிராட்டிக்கு, 
பெருமாள் தகுந்தவர்; கறுத்த கண்களை 
_____________________________________________________________ 
1. 
ஸ்ரீராமா. சுந். 15 : 53 
2. இத்தனை நாளும் ‘பிரணயி’ 
என்று பிரமித்திருந்தோம்; பிரணயிகள் படி அன்றிக்கே,பிரிந்து தரித்திருக்கையாலே பிரணயி 
அல்லர்; கேவலம் பிரபு என்றபடி. புதியது
 உண்டிலர் - ஏகதேசமும் அனுபவித்திலர். புதியது உண்கை - 
ஏகதேச அனுபவம்.
 
 
  ‘இப்போது இவளைக் கண்டு 
இப்படிச் சொல்லுகையாலே, இவளைக் காணாமையாலேஅவன் பழித்தான்’ என்பது, பொருளாற்றலால் 
போதரும்.
 
3. இரவல் உடம்போ - 
பிராட்டியின் உடம்பு போன்று பரதந்திரமான உடம்போ? 
4. ஸ்ரீராமா. சுந். 16 : 
5. 
  ‘நம்பியைக் காண நங்கைக்கு 
ஆயிரம் நயனம் வேண்டும். கொம்பினைக் காணுந் தோறும் 
குரிசிற்கும் அன்ன தேயாம்’
 
  என்று, மேற்கூறிய சுலோகத்தின் 
பொருளையே வேறொரு வகையாகக் கூறுவர் கம்பர். |