| உ 
  
    | 
    98 | 
திருவாய்மொழி - 
இரண்டாம் பத்து |  
உடையளான இப்பிராட்டியும் 
பெருமாளுக்குத் தகுந்தவர்’ என்னும் படி காணும் இருக்கிறது. உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள் 
- ‘விஷயத்திற்குத் தகுதியாக அன்றோ ஆசையும் இருப்பது? உம்மை அணைய ஆசைப்பட்டாளோ? காட்சியிலேயும் 
அருமைப்படுத்து வீரோ?’ என்பாள், ‘காணும் ஆசை’ என்கிறாள். 1‘ஆசை 
என்னும் கடல்’ என்கிறபடியே,’ ஆசையாகிய கடலிலே அழுந்தாநின்றாள்’ என்பாள், ‘ஆசையுள்’ 
என்கிறாள். நைகின்றாள்’ என்பதில், 4இவளைத் தரிப்பிக்க வேண்டா; அடியில் நிலையிலே 
நிறுத்த அமையும்’ என்ற தொனிப்பொருள் தோன்றும். இதனால், ‘வாடுகை தான் தேட்டமாம்படி ஆயிற்று 
என்கிறாள்’ என்றயடி.. 
    விறல் வாணன் ஆயிரம் 
தோள் துணித்தீர் -‘நையும் இது வேயோ வேண்டுவது, தடைகள் கிடக்க?’ என்றோ நீர் சொல்லுகிறீர்? 
வாணனுடைய தோள்களாகிய வனத்தைக் காட்டிலும் பரப்பு உண்டோ இவளுடைய விரோதி வர்க்கம்? 
உஷையோடு அநிருத்தனைச் சேர்த்தவர் அன்றோ நீர்? பேரனுமாய் ஆணுமாகிலோ உதவலாவது? உம்மோடு 
கலந்த அபலைக்கு உதவல் ஆகாதோ?’ என்பது தொனிப் பொருள். உம்மைக்காண - உம்மை இவள் காண்கைக்கு 
ஈடாக. 2கருமுகை மாலை தேடுவார் சூடுவதற்காகவே தேடுவது; சும்மாட்டைக் கொள்ள அன்று.
அது போன்று, உம்மை ஆசைப்படுவார் படுவது, காட்சிக்காக ஆயிற்று; 3‘அழைப்பன் 
திருவேங்கடத்தானைக் காண’ என்றார் திருமழிசைப்பிரான். 4‘காரார் திருமேனி 
காணுமளவும் போய்’ என்றார் திருமங்கைமன்னன். 5‘கண்களால் காண வருங்கொல்?’ என்று 
இவர்தாமே பின்னரும் அருளிச் செய்வர். நீர் இரக்கம் இலீர் -6‘தன் சரீரத்தின்மேல் 
தங்கி இருந்த காட்டு ஈக்களையும் கொசுக்களையும் பாம்புகளையும் ஓட்டமாட்டார்’ என்கிறபடியே, 
பிராட்டியைப் பிரிந்த துன்பத்தால், மற்றைப் பிராணி 
____________________________________________________________ 
1. பெரிய திருமொழி, 
4. 9 : 3. 
2. ‘கருமுகை மாலை தேடுவார்’ 
என்று தொடங்கும் வாக்கியம், ஸ்வாபதேசத்தில் பாவம்.‘சும்மாட்டைக் கொள்ள அன்று’ என்றது, 
வேறுபிரயோஜனங்களைப் பெறுதற்குச்
 சாதனமாகக் கொள்ளுதற்கு அன்று என்றபடி.
 
3. நான்முகன் திருவந். 
39. 
4. சிறிய திருமடல், 69. 
5. திருவாய். 3. 8 : 5 
6. ஸ்ரீராமா. சுந். 36 : 
42. |