கள
நான்காந்திருவாய்மொழி - பா. 3 |
99 |
களால் உண்டாகும் துன்பத்தையும்
அறியாதிருந்த நீர், இப்பொழுது நோவுபடுகை தவிர்ந்தால், சாமான்யமான இரக்கமும் போகவேண்டுமோ?
‘ஆயின், நீரே இரங்கல் வேண்டும்; நீர் இரங்கும்படி செய்யத் தக்க சாதனம் இவளிடத்து இன்று
என்று கூறுவது போன்று, ‘நீர் இரக்கமிலீர்’ என்று கூறுவது எற்றிற்கு? ‘நைகின்றாள்’ என்று திருத்தாயார்
கூறியது, இறைவன் இரக்கத்திற்குச் சாதனம் ஆகாதோ?’ எனின், ‘இவள் நைவு பேற்றுக்கு உபாயமன்று;
அவன் இரக்கம் பேற்றுக்குச் சாதனம்,’ என்று காணும் திருத்தாயார் இருக்கிறது. ‘ஆயின், இவள் நைவிற்குப்
பலன் தான் யாதோ?’ எனின், ‘இவள் நைவு அவன் இரக்கத்துக்ப் பரிகரம், அவன் இரக்கம் பேற்றுக்குச்
சாதனம்; 1‘இப்பரம்பொருள், மனத்தாலும் நிதித்தியாசனத்தாலும் மிகுந்த
கேள்வியாலும் அடையத்தக்கவன் அல்லன்; இறைவன் எவனை வரிக்கின்றானோ, அவனால் அடையத் தக்கவன்,’
என்கிறபடியே, தானே காட்டாக காணும் இத்தனையே.
(2)
146
இரக்க மனத்தொடு
எரிஅணை
அரக்கும் மெழுகும்ஒக்
கும்இவள்;
இரக்கம் எழீர்;இதற்கு
என்செய்கேன்,
அரக்கன் இலங்கைசெற்
றீருக்கே?
பொ - ரை :
இவள் இரக்கம் பொருந்திய மனத்தால் நெருப்பினைச் சேர்ந்த அரக்கினையும் மெழுகினையும் ஒப்பாள்;
நீர் இரக்கம் உடையீர் ஆகின்றிலீர்; இது நிமித்தமாக, இரவாணனுடைய இலங்கையை அழித்த உமக்கு
எதனைச் செய்வேன்?
வி - கு :
‘அரக்கன் இலங்கை செற்றீருக்கு’ என்ற தொடர், ‘உம்மைப் பிரிந்து வருந்தின பிராட்டியின்பொருட்டு
இலங்கையை அழித்து அவள் துன்பத்தினை நீக்கினீர்; பிரிந்து வருந்துகிற இவளுடைய துன்பத்தை நீக்குதற்கு
இப்பொழுது இரக்கமும் கொள்கின்றிலீர்’ என்ற கருத்தை உட்கொண்டது. மனத்தொடு - ஒடு உருபு,
கருவிப் பொருளில் வந்தது. அணை அரக்கு - வினைத்தொகை. எழீர் - எதிர்மறை முற்று. செற்றீர்
- பெயர்.
_____________________________________________________________
1. முண்டகோபநிடதம்.
3. 2 : 3
இவ்வுபநிடத வாக்கியத்தின்
பொருளோடு ‘வீட்டிற்கு நிமித்த காரணமாய் முதற்பொருளை
உணர்தற்கு உபாயம் மூன்று; அவை,
கேள்வி, விமரிசம், பாவணை என்பன: அவற்றுள்
கேள்வி இதனாற்கூறப்பட்டது,’ என்னும் பரிமேலழகருரை
ஒரு புடை ஒப்பு நோக்கத்தகும்
(குறள். 356)
நிதித்தியாசனம்
- பாவனை; தெளிதல்.
|