|
உதவ
உதவினபடி சொல்லுகிறது;
விரோதியான மஹாபலியாலே பூமி கவரப்பட்ட அன்று, எல்லை நடந்து மீட்டுக்கொண்ட உபகாரகன்.
பரன் - எல்லாப் பொருள்கட்கும் உயர்ந்தவன். சென்று சேர் திரு வேங்கட மா மலை - அவன் தனக்கு
1உத்தேஸ்யம்’ என்று வந்து வசிக்கிற தேசம். ஒன்றுமே தொழ - ‘ஒன்றையுமே வணங்க.
உள்ளே எழுந்தருளி யிருக்கிறவன் தானும் வேண்டா, திருமலையாழ்வார்தாமே அமையும்,’ என்பார்,
‘ஒன்றுமே’ என்கிறார். நம் வினை ஓயும் - ‘பெற வேண்டும் பேற்றினைப் பெற்றிலோம்’ என்கிற
துக்கத்தைப் போக்கும்’ என்னுதல்; ‘வேங்கடங்கள்’ என்னும் பாசுரத்திற்கூறிய, அடிமை செய்வதற்குத்
தடையாக உள்ளனவற்றைப் போக்கும் என்னுதல்.
(8)
253
ஓயும் மூப்புப் பிறப்புஇறப்
புப்பிணி
வீயு மாறுசெய்
வான்திரு வேங்கடத்து
ஆயன் நாள்மல
ராம்அடித் தாமரை
வாயு ளுமமனத் துள்ளும்வைப்
பார்கட்கே.
பொ-ரை:
நோய்களை
அழியும்படி செய்கின்றவனான திருவேங்கடத்திலிருக்கிற எம்பெருமானது அன்று மலர்ந்த தாமரை மலர்
போன்ற திருவடிகளை வாயிலும் மனத்திலும் வைப்பார்கட்கு முதுமை பிறப்பு இறப்பு இவைகள் நீங்கும்.
வி-கு :
‘மூப்பு பிறப்பு இறப்பு ஓயும்,’ என மாறுக. செய்வான் - வினையாலணையும் பெயர். வினையெச்சமாகப்
பொருள் கோடலுமாம். ஆயன் - கிருஷ்ணன். ‘வைப்பார்கட்கு ஓயும்’ என முடிக்க.
ஈடு : ஒன்பதாம்
பாட்டு. ‘நம் விரோதியையும் போக்கிப் பேற்றினையும் திருமலையாழ்வார்தாமே தருவர்,’ என்றார்
மேல் இரண்டு பாசுரங்களாலே; 1‘இப்படி விரோதியான பாவங்களைப் போக்கி வீடு பேற்றினைத்
தருவதற்குத் திருமலையாழ்வாரெல்லாம் வேண்டுமோ? திருமலையாழ்வாரில் ஒரு பகுதி அமையாதோ?’ என்கிறார்
இப்பாசுரத்தில். ‘ஒரு பகுதி’ என்
____________________________________________________
1. ‘மேல்
பாசுரங்களில் சரமாவதியான திருமலையாழ்வாரைப் பற்றினவர்,
இப்பாசுரத்தில் பிரதமாவதியான திருவேங்கடமுடையானைச்
சொல்லுவான்
என்?’ என்னும் வினாவைத் திருவுள்ளம் பற்றி, அதற்கு விடை அருளிச்
செய்கிறார்.
‘இப்படி விரோதியான பாவங்களை’ என்று தொடங்கி.
|