|
பெ
பொ-ரை :
‘பரந்த புகழையுடைய கண்ணனாய், எனக்குத் தலைவனாய், தாமரை போன்ற கண்களையுடையவனாயிருக்கிற
இறைவனைச் சொல்லும் வகை அறியமாட்டேன் எல்லா மலைகளும் என்பேனோ! பொருந்திய சிறப்பையுடைய
மழை என்பேனோ! விளங்குகிற நக்ஷத்திரங்கள் என்பேனோ! நாவால் இயற்றப்பட்ட அறுபத்து நான்கு
கலைகள் என்பேனோ! ஞானத்திற்குக் காரணமான ஒலி என்பேனோ! யாது என்பேன்?’ என்றவாறு.
வி-கு :
‘சீர்த்தி மிகுபுகழ்’ என்றார் தொல்காப்பியனார்.
ஈடு :
இரண்டாம் பாட்டு. மேற்கூறிய ஐம்பெரும்பூதங்களினுடைய காரியங்களை முறையாகப் பேசுகிறார்.
கூவுமாறு அறிய மாட்டேன்
- பாசுரமிட்டு அழைக்கும்படி அறிகின்றிலேன். அர்த்தங்களில் அறியக் கூடாதது ஒன்று உண்டாய்ச்
சொல்லுகிறாரல்லர்; பகவானுடைய திருவருளால் வந்த வெளிச்சிறப்பால் அர்த்தங்கள் அடைய அறியக்
கூடியவாயிராநின்றன. ‘பின்னை என்னை?’ எனின், பத்தியினாலே பரவசப்பட்டுப் பேசமாட்டுகின்றிலேன்
என்கிறார். அன்றி, ‘இவ்வளவு என்று சொல்லத்தக்க அளவு கடந்திருக்கையால் பேச மாட்டுகின்றிலேன்
என்கிறார்,’ என்னுதல். குன்றங்கள் அனைத்தும் என்கோ - பூமியினுடைய வன்மை ஓரிடத்திலே திரண்டாற்போலேயாய்,
பூமிக்கு ஆதாரமாயிருக்கிற மலைகள் என்பேனோ!
இது, மேல் ‘பொரு இல் சீர்ப்பூமி’ என்றதனுடைய காரியம். மேவு சீர் மாரி என்கோ - கண்டார்
மேவும்படியான வடிவழகையும் குளிர்த்தியையுமுடைய மேகம் என்பேனோ! 1மேகம் இவர்தமக்கு
இரண்டொரு காரியமாம்; திருமேனியில் அழகுக்குப் போலியாயிருக்கையாலேயும் விடமாட்டார். இது,
மேல் ‘திகழுந்தண் பரவை’ என்றதன் காரியம். விளங்கு தாரகைகள் என்கோ - விளங்குகின்ற நக்ஷத்திரங்கள்
என்பேனோ! தாரகைகளைக் கூறியது, ஒளி காரணமான எல்லாப் பொருள்களுக்கும் உபலக்ஷணம். இது, மேல்
‘தீ என்கோ!’ என்றதன் காரியம். நா இயல் கலைகள் என்கோ - நாவாலே இயற்றப்பட்ட அறுபத்து
நான்கு கலைகள் என்பேனோ! இது, மேல் ‘வாயு என்கோ! என்ற வாயுவின் காரியம். ‘ஆகாயத்தின் குணமான
ஒலியானது வாயு
___________________________________________________
1. மேகம் இவர்க்கு
இரண்டொரு காரியமாம்’ என்றது, ‘ததீயத்வ ஆகாரததாலும்
உத்தேஸ்யமாய், ஒப்புமையாலும் உத்தேஸ்யமாயுள்ளது,
என்றபடி.
‘போலியாயிருக்கையாலேயும் விடமாட்டார்,’ என்ற உம்மையால் ‘ததீயத்வ
ஆகாரத்தாலும்
விடமாட்டார்’ என்று கொள்க.
|