|
தனத
தனத்தாலே ஆகாச குணத்தையே
சொல்லிற்றாமத்தனையன்றோ இதில்?
பாவு சீர்க்கண்ணன்
- 1‘எல்லாராலும் அறியப்பட்டவர்’ என்கிறபடியே, எங்கும் ஒக்கப் பரம்பின கல்யாண
குணங்களையுடைய கிருஷ்ணன். எம்மான் பங்கயக் கண்ணன் - கண்ணழகாலேயாயிற்று இவரை 2ஒடியெறிந்தது.
‘‘பங்கயக் கண்ணன்’ என்றதனோடு ‘குன்றங்கள் அனைத்துமென்கோ!’ என்பது போன்றவைகளைச் சேர்த்துச்
சொல்வான் என்?’ என்னில், ‘பங்கயக் கண்ணன்’ என்றதனோடு ‘குன்றங்கள் அனைத்தும்’ என்றதனோடு
வாசியற்றிருக்கிறதாயிற்று இவர்க்கு. அன்றிக்கே, 3‘பெரும் புறக்கடல்’ என்கிற திருமொழி
நிர்வஹிக்கிற கிரமத்திலே ‘குன்றங்களனைத்தும்’ என்றது, 4‘நின்ற குன்றத்தினை நோக்கி’
என்னுமாறு போன்று வடிவிற்குப் போலியாய், ‘மேவு சீர் மாரி’ என்று மேகத்தைச் சொன்னவிடம் திருநிறத்துக்குப்
போலியாயிருக்கிறது’ என்று நிர்வஹிப்பாருமுண்டு.
(2)
258
பங்கயக் கண்ணன்
என்கோ!
பவளச்செவ்
வாயன் என்கோ!
அங்கதிர் அடியன்
என்கோ!
அஞ்சன வண்ணன்
என்கோ!
செங்கதிர் முடியன்
என்கோ!
திருமறு மார்பன்
என்கோ!
சங்குசக் கரத்தின்
என்கோ
சாதிமா ணிக்கத்
தையே!
___________________________________________________
ஈண்டுத் ‘தத்தம் பகாப்
பதங்கள்’ என்றது முதனிலைகளையே என்பது
பாரிசேடத்தாற்பெற்றாம்,’ என்பர்
சங்கரநமச்சிவாயர்
(நன். சூ. 134).
பாரிசேடம் - எஞ்சி நின்றதனைக் கொள்ளுதல். ‘ஆகாச குணத்தையே
சொல்லிற்றாமத்தனையன்றோ இதில்?’ என்றது, ‘குணம் ஆதாரம் இல்லாமல்
நில்லாமையாலே குணிபர்யந்தாபிதாநம்
பண்ணிக் காரிய ஆகாசத்தையே
சொல்லுகிறது,’ என்றபடி.
1.
ஸ்ரீராமா. சுந் 21 : 20.
2. ஒடி எறிதல் -
கால் கட்டுதல்; ‘அப்பாற்போகவொட்டாமல் தடுத்தல்’
என்றபடி.
3. ‘’பெரும்புறக்கடல்’
என்கிற திருமொழியிலே நிர்வஹிக்கின்ற கிரமத்திலே’
என்றது, ‘பெரும்புறக்கடல்’ என்ற பெரிய
திருமொழிப் பாசுரத்திற்கு,
சாமாநாதிகரண்ய நியாயத்தாலே பொருள் கூறாமல், பெரும்புறக்கடல்
போலே
இருக்கிறவன் என்ற உவமையாகக் கொண்டு பொருள் கூறும் முறையிலே
என்றபடி. பெரும்புறக்கடல்
- பெரிய திருமொழி,
7. 10 : 1.
4. நின்ற குன்றத்தினை -
திருவாய். 4. 4 : 4.
|