முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
120

தருவது தலைவனாந்தன்மைக்குப் பிரகாசகமான திருமுடியன்றோ? திரு மறு மார்பன் என்கோ - திருமுடியைக் கண்டால் சுவாதந்தரியத்தை அனுசந்தித்து இறாய்க்குமதனைத் தவிர்த்துத் தருவது லக்ஷ்மீ சம்பந்தமன்றோ? 1‘திருவையும் மறுவையும் மார்வில் உடையவன் என்பேனோ!’ சங்கு சக்கரத்தன் என்கோ - 2‘இச்சேர்த்திக்கு என் வருகிறதோ!’ என்று இடமல்லாத இடத்திலும் அச்சத்தாலே ஐயங்கொள்ளுகிற பிரேமத்தின் முடிவெல்லையிலே நிற்கின்றவர்களுடைய வயிற்றெரிச்சலைத் தவிர்ப்பன திவ்விய ஆயுதங்கள் அல்லவோ? ‘வயிற்றெரிச்சலைத் தவிர்ப்பதற்குத் திவ்விய ஆயுதங்கள் காரணம் ஆமோ?’ எனின், 3‘வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு’ என்னா, ‘சுடராழியும் பல்லாண்டு’ என்னாநின்றார்களன்றோ? சாதி மாணிக்கத்தையே - போலி அன்றியே ஆகரத்திலே பிறந்து நன்றான மாணிக்கம் போலே குற்றமற்றதாய் இயல்பாய் அமைந்த வடிவழகையுடையவனை.

(3)

259

சாதிமா ணிக்கம் என்கோ!
    சவிகொள் பொன் முத்தம் என்கோ!
சாதிநல் வயிரம் என்கோ!
    தவிவுஇல்சீர் விளக்கம் என்கோ!
ஆதிஅம் சோதி என்கோ!
    ஆதிஅம் புருடன் என்கோ!
ஆதும்இல் காலத்து எந்தை
    அச்சுதன் அமல னையே.

    பொ-ரை : எனக்கு ஒரு துணையும் இல்லாத சமுசார தசையிலே தன்னோடு உண்டான சம்பந்தத்தை அறிவித்தவன், என்னை நழுவ

___________________________________________________

1. ‘திருவாகிய மறுவை அணிந்த மார்பன்’ என்று பொருள்கொண்டார்
  பரிமேலழகர்; ‘திருமகளாதலால், ‘புனைமறு’ என்றார்’ என்ற பரிபாடலுரை    
  (பரி. 4 : 59) காண்க. இங்ஙனமே பொருள் எழுதினார் நச்சினார்க்கினியரும்.

(பத். பெரும்பாண். 29-30)

2. பிராட்டியைக் கூறியதன் பின், சங்கு சக்கரங்களை அருளிச்செய்ததற்குக்
  காரணத்தை அருளிச்செய்கிறார், ‘இச்சேர்த்திக்கு’ என்று தொடங்கி.

3. திருப்பல்லாண்டு, 2.