|
இ
இருக்குமதுவுமன்றிக்கே,
விசேடண விசேடியங்கள் இரண்டிலும் விசேடியமே தோன்றுகிறதாயிற்று விசேடியப் பிராதாந்யத்தாலே.
இதுவன்றோ வேதாந்தக் கேள்வி ஞானமுடையார்க்கு இருக்கும்படி? 1‘வேதாந்தத்தைக் கேட்பதனால்தான்
ஞானம் நிறைவு பெறுகின்றது,’ என்னாநின்றதன்றோ? இதனால், எல்லாப் பொருள்களும் பிரகாரமாக,
தான் பிரகாரியாயிருக்கும்படியைச் சொல்லுகிறது.
2இவ்விபூதியிலும்
3‘விபூதியோடு கூடினவும் செல்வத்தையுடையனவும் நல்ல காரியங்களைச் செய்ய முயற்சி செய்வனவுமான
பொருள்கள் எவை எவை உளவோ, அவையெல்லாம் என்னுடைய தேஜஸ்ஸின் ஒரு கூற்றிலிருந்து உண்டானவை
என்று நீ அறிவாயாக,’ என்கிறபடியே, எல்லாம் தனக்கு விபூதியாய் இருந்தும், சிறப்புடைய சில
பொருள்களை எடுத்து ‘என்னுடைய விபூதி’ என்றானன்றோ இறைவன்? அப்படியே இவரும் பேரொளியையுடைய
மாணிக்கம் முதலான பொருள்கள் அவனுக்கு விபூதியாயிருக்கிறபடியை அனுபவிக்கிறார்.
சாதி மாணிக்கம்
என்கோ - நல்ல ஆகரத்திலே பிறந்த மாணிக்கம் என்பேனோ! சவி கொள் பொன் முத்தம் என்கோ
- புகரையுடைத்தான பொன் என்பேனோ! நீர்மையையுடைத்தான முத்தம் என்பேனோ! ‘சவி’ என்பது,
பொன்னிற்கு அடையாகும் போது ‘ஒளி’ என்ற பொருளையும், முத்தத்திற்கு அடையாகும் போது
‘நீர்மை’ என்ற பொருளையும் உணர்த்தும். சாதி நல்வயிரம் என்கோ - நல்ல ஆகரத்திலே பிறந்த
நன்றான வைரம் என்பேனோ! நலிவு இல் சீர் விளக்கம் என்கோ - பிளவு இல்லாத
____________________________________________________
1.
வேதாந்த சங்கிரஹம்.
பிரகாரம் -
அடை; சரீரம். பிரகாரி - அடை கொளி;
உயிர்.
2. ஆக, இது வரையிலும்
இத்திருவாய்மொழியில் சொல்லப்படும் பொருளைப்
பிராசங்கிகமாக (இடைப்பிற வரல்)
அருளிச்செய்து, ‘இவ் விபூதியிலும்’
என்று தொடங்கிப் பாசுரத்திற்கு அவதாரிகை அருளிச்செய்கிறார்.
3.
ஸ்ரீ கீதை, 10 : 41.
4. ‘சிறப்புடைய சில
பொருள்களை எடுத்து என்னுடைய விபூதி என்றான்
அன்றோ?’ என்றது,
பகவத்கீதை,
பத்தாம்
அத்தியாயத்தில், 20 ஆம்
சுலோகம் முதல் 40 ஆம் சுலோகம் முடியக் கூறியுள்ளவற்றைத் திருவுள்ளம்
பற்றி.
|