முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
123

அழ

அழகையுடைய விளக்கம் என்பேனோ! ஒளியையுடைய பொருளைச் சொல்லுதல்; ஒளியை மாத்திரம் சொல்லுதல். என்றது, ‘சூரியன் முதலியோரைச் சொல்லுதல். சூரியன் முதலியோரிடத்துள்ள ஒளியை மட்டும் சொல்லுதல்,’ என்றபடி. ஆதி அம் சோதி என்கோ - 1‘பரமபதத்தைக் காரியங்களுக்கெல்லாம் முற்பட்ட காரணமாக அறிகின்றார்கள்’ என்கிறபடியே, இவ்வருகுண்டான காரியங்களுக்கெல்லாம் தான் காரணமாய், இவற்றினுடைய தோற்றத்திற்கு முன்னே உண்டாய்த் தான் ஒரே தன்மையாய்ச் 2சூரியன் சந்திரன் அக்நி இவர்களைக்காட்டிலும் கோடி மடங்கு அதிகமாய் விளங்குகின்ற பரமபதம்’ என்கிறபடியே, எல்லை இல்லாத பேரொளி உருவமாய் விளங்குகின்ற பரமபதத்தை விபூதியாகவுடையவன் என்பேனோ! ‘ஆயின், பரமபதம் காரணமானபடி என்?’ எனின், 3காரியத்துக்கு நியமமாக முன் கணத்தில் இருப்பது ஒன்றற்கன்றே காரணமாம் தன்மை உள்ளது? அன்றி, ஆதி என்கிறது, அஸ்த்ர பூஷண அத்தியாயத்தின்படியே சொல்லிற்றாகவுமாம். என்றது, 4ஸ்ரீ வத்சரூபத்தாலே பிரகிருதி அமிசத்தைத் தரிக்கும் என்றும், ஸ்ரீ கௌஸ்துபத்தாலே உயிர்களின் கூட்டத்தைத் தரிக்கும் என்றும் சொல்லாநின்றதே; 5அந்தத் திருமேனி

____________________________________________________

1. ஜிதந்தா.

2. பாரதம், ஆரண்யபர்வம்.

3. ‘காரிய நியத பூர்வ விருத்தி காரணம் - காரியத்திற்கு இன்றியமையாததாய்
  முன் கணத்திலே இருக்கக் கூடியதாயிருப்பது காரணம்,’ என்று
  காரணத்திற்கு இலக்கணம் கூறப்படும்.

4. ‘புருடன்மணி வரமாகப் பொன்றா மூலப்
       பிரகிருதி மறுவாக மான்தண் டாகத்
   தெருள்மருள்வாள் உறையாக ஆங்கா ரங்கள்
       சார்ங்கஞ்சங் காகமனம் திகிரி யாக
   இருடிகங்கள் ஈரைந்தும் சரங்க ளாக
       இருபூத மாலைவன மாலை யாகக்
   கருடனுரு வாமறையின் பொருளாங் கண்ணன்
       கரிகிரிமேல் நின்றனைத்தும் காக்கின் றானே.’

  என்ற ஸ்ரீதேசிகன் ஸ்ரீசூக்தி இவ்விடத்தில் நினைவு கூர்க. (அதிகார சங்.
  80)

5. ‘அந்தத் திருமேனிதானும்’ என்றது, ‘அவ்வாறு தரித்திருக்கின்ற
  திருமேனியும்’ என்றபடி.