|
ந
நின்ற போதும் இவற்றோடே
கலந்து இவற்றின் குற்றம் தன் பக்கல் தட்டாதபடி நிற்கும் நிலையினைச் சொல்லுகிறது 1அங்கு;
இவை, தான் என்ற சொல்லுக்குள்ளேயாம்படி கலந்து நின்ற போதும் இவற்றின் குற்றம் தன் பக்கல்
தட்டாதபடி நிற்கும் நிலையினைச் சொல்லுகிறது இங்கு,’ என்று அருளிச்செய்வர். 2அதற்கு
அடி, பிரவேச ஹேது விசேஷம்.
(4)
260
அச்சுதன் அமலன் என்கோ!
அடியவர் வினைகெ
டுக்கும்
நச்சுமா மருந்தம்
என்கோ!
நலம்கடல்
அமுதம் என்கோ!
அச்சுவைக் கட்டி
என்கோ!
அறுசுவை அடிசில்
என்கோ!
நெய்ச்சுவைத் தேறல்
என்கோ!
கனிஎன்கோ!
பால்என் கேனோ!
பொ-ரை :
‘அழிவில்லாதவனாய்க் குற்றமற்றவன் என்பேனோ! அடியார்களுடைய பாவங்களைப் போக்குகின்ற
விரும்பப்படுகின்ற உயர்ந்த மருந்து என்பேனோ! கடலிலே கிடக்கின்ற சிறந்த அமிருதம் என்பேனோ!
அமிருதத்தின் சுவையையுடைய கருப்புக்கட்டி என்பேனோ! அறுசுவைகளையுடைய உணவு என்பேனோ! மிக்க
சுவையுடைய தேன் என்பேனோ! கனி என்பேனோ! பால் என்பேனோ! யாது என்பேன்?’ என்றவாறு.
வி - கு :
‘கெடுக்கும் மருந்து’ எனக் கூட்டுக.
ஈடு : ஐந்தாம்
பாட்டு. 3சுவையுடைய பொருள்களை விபூதியாக உடையனாயிருக்கிறபடியை அருளிச்செய்கிறார்.
____________________________________________________
1. ‘அங்கு’ என்றது,
காரிய நிலையைக் குறித்தது, ‘இங்கு’ என்றது,
காரணநிலையைக் குறித்தது.
2. அதற்கு அடி - தோஷம்
தட்டாதபடி இருத்தற்குக் காரணம். ‘பிரவேச ஹேது
விசேடம்’ என்றது, ‘சேதநன் கர்மம் அடியாகப்
பிரவேசிப்பான்; ஈசுவரன்
அநுக்கிரகம் அடியாகப் பிரவேசிப்பான்; ஆதலால், ஈசுவரனுக்குக் குற்றம்
தட்டாது,’ என்றபடி.
3. ‘நலங்கடல்
அமுதம் என்கோ!’ என்பது போன்றவைகளைக் கடாக்ஷித்து,
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
|