|
என
என்னுதல்; என்றது, இவன்
1பிராமாதிகமாகப் பண்ணும் பாவங்களையும் காணாக் கண்ணிட வல்லனாயிருக்கை. தான்
அறிந்து செய்கின்ற அன்று, பிறந்த ஞானத்தோடு மாறுபடும்; தன்னையறிந்த பின்பு முதலிலே இவற்றில்
மூளான்; ஆன பின்பும், 2விரோதியான சரீரம் தொடர்ந்து வருகையாலே நெஞ்சு இருண்டு
பாவங்களைச் செய்தல் தவிரான்; பின்னர் ஞானம் பிறந்தவாறே அதற்கு வருந்திப் பின்
வாங்குவான். அவ்வாறன்றி, அறிந்தே பாவங்களைச் செய்வானாயின் ஞானம் பிறந்ததில்லையேயாமித்தனை.
நலம் கடல் அமுதம்
என்கோ - கடலிலே கடையாமல் வந்த அமிருதம் என்பேனோ! அச்சுவைக் கட்டி என்கோ - அவ்வமிருதத்தைச்
சார்த்து ‘அச்சுவைக் கட்டி’ என்று சுட்டுகிறாராதலின், ‘கட்டி’ என்பது கருப்புக்கட்டியாமித்தனை.
அவ்வமிர்தத்தோடொத்த சுவையையுடைய கருப்புக்கட்டி என்பேனோ! அறுசுவை அடிசில் என்கோ - ஆறுபடிப்பட்ட
சுவையையுடைய அடிசில் என்பேனோ! அறுசுவையாவன: ‘கைப்பு, புளிப்பு, கார்ப்பு, தித்திப்பு, துவர்ப்பு,
உவர்ப்பு’ என்பன. நெய்ச்சுவைத் தேறல் என்கோ - மிக்க சுவையையுடைய தேன் என்பேனோ! நெய் -
மிகுதி. இனி, ‘சுவை’ என்பதனை இடைநிலைத் தீவகமாகக் கொண்டு, ‘சுவையையுடைய நெய், சுவையையுடைய
தேறல்’ என்னுதல். கனி என்கோ பால் என்கோ - ‘ஒரு காலத்தில் இனியதாம் பழம் என்பேனோ!
இனியதான பால் என்பேனோ! யாது என்பேன்?’ என்றபடி.
(5)
261
பால்என்கோ! நான்கு
வேதப்
பயன்என்கோ!
சமய நீதி
நூல்என்கோ! நுடங்கு
கேள்வி
இசைஎன்கோ!
இவற்றுள் நல்ல
மேல்என்கோ!
வினையின் மிக்க
பயன்என்கோ!
கண்ணன் என்கோ!
மால்என்கோ!
மாயன் என்கோ
வானவர்
ஆதி யையே.
___________________________________________________
1. பிரமாதிகம் - அஜாக்கிரதை. இவ்விடத்தில், வாலியைக்
கொன்ற வியாஜம்
மகாராஜர்க்கும் (சுக்கிரீவன்) உண்டாயிருக்கவும் அவரை
ரக்ஷித்தமையை
நினைவுகூர்க.
2. ‘வேங்கடங்கள்’
என்ற பாசுரத்தின் வியாக்கியானம் பார்க்க, (பக். 92)
|