முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
128

பெ

    பொ-ரை : ‘தேவர்களுடைய இருப்பு முதலானவற்றிற்கெல்லாம் காரணனான இறைவனைப் பால் என்பேனோ! நான்கு வேதங்களாகிய பயன் என்பேனோ! வைதிக சமயத்துக்குரிய இதிகாச புராணங்கள் என்பேனோ! கேட்பார்களை ஈடுபடுத்துகின்ற கேள்வியையுடைய இசை என்பேனோ! இதுகாறும் கூறியவற்றுளெல்லாம் வேறுபட்டதாய் மேம்பட்டதாய் இருப்பது ஒன்று என்பேனோ! சிறிய முயற்சியால் பெரிய பயனைக் கொடுப்பது ஒன்று என்பேனோ! கண்ணன் என்பேனோ! மால் என்பேனோ! மாயன் என்பேனோ! யாது என்பேன்?’ என்றபடி.

    ஈடு : ஆறாம் பாட்டு. 1வேதம் தொடக்கமான இயலும் இசையுமான ஒலிகளின் கூட்டத்தை விபூதியாக உடையனாயிருக்கிறபடியைப் பேசுகிறார்.

    பால் என்கோ - 2மேற்பாசுரத்தில் கூறிய சுவை பின் நாடினபடி. நான்கு வேதப் பயன் என்கோ - நாலு வகைப்பட்ட பிரமாணக் கூட்டத்தில் சாரமாய் இருக்கிற வேதமாகிற பிரயோஜனம் என்பேனோ! வேதங்களில் வேறேயும் ஒரு கூறு வேறு ஒருவனைத் துதித்தாலேயன்றோ ‘நான்கு வேதங்களில் பயன்’ என்ன வேண்டுவது? அது இல்லையாதலின் ‘நான்கு வேதப் பயன்’ என்கிறார். இனி, வேதமானது ஆராதன சொரூபம் சொல்லுமிடமும், ஆராதிக்கப்படும் இறைவன் சொரூபம் சொல்லுமிடமுமாய்க் கட்டடங்க இவனையே சொல்லுகையாலே, வேதத்தில் நாலு மூலைக்கும் உள்ள பயன் இல்லாத இடம் இல்லையாதலின், ‘நாலு வேதப் பயன்’ என்கிறார் என்னுதல்: 3‘பூர்வபாகம் உத்தரபாகம் என்று பிரிவுபட்டுள்ள எல்லா வேதங்களாலும் நான் அறியப்படுமவன்’ என்பது ஸ்ரீ கீதை. சமய நீதி நூல் என்கோ - வைதிக சமயத்துக்கு நிர்வாஹகமான இதிகாச புராணங்கள் என்பேனோ! இவை வேதங்களின் பொருள்களை விரித்துக் கூறுவனவாதலின், ‘நீதி நூல்’ என்கிறார். நீதி - நிர்வாஹகம். 4‘வேதமானது இதிகாசங்களாலும் புராணங்களாலும்

_____________________________________________________ 

1. ‘நான்கு வேதப் பயன் என்கோ!’ என்பது போன்றவைகளைக் கடாக்ஷித்து,
  அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. கூறியது கூறல் ஆகாமைக்குக் காரணம் காட்டுகிறார், ‘மேற்பாசுரத்திற்கூறிய
  சுவை பின் நாடினபடி’ என்று.

3. ஸ்ரீ கீதை, 15 : 15.

4. பார்ஹஸ்பத்ய ஸ்மிருதி.