முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
129

விவரிக்கப்பட வேண்டியது’ என்பது ஸ்மிருதி வாக்கியம். நுடங்கு கேள்வி இசை என்கோ - கேட்டாரை நஞ்சுண்டாற் போன்று மயங்கச்செய்கிற கேள்வியையுடைத்தான இசை என்பேனோ!

    இவற்றுள் நல்ல மேல் என்கோ - மேலே கூறியவற்றுளெல்லாம் வேறுபட்டதாய் அவ்வருகாய் இருப்பது ஒன்று என்பேனோ! 1’எல்லாம் சொல்ல வேண்டும், எல்லாம் சொல்லமாட்டார்’ ஆதலின், ‘இவற்றுள் நல்ல மேல் என்கோ’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார். வினையில் மிக்க பயன் என்கோ - சிறிய முயற்சியால் பல விதமான பலத்தைப் பலிப்பது ஒன்று என்பேனோ! ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின், கலநெல்லை வித்தி நூறாயிரக் கலமாக விளைத்துக்கொள்வாரைப் போன்று, இத்தலையிலுள்ளது நட்புத்தன்மையேயாய் அதற்கு 2’நத்யஜேயம்-நான் விடமாட்டேன்’ என்னும்படி இருக்கையைக் கூறியபடி. கண்ணன் என்கோ - 3’உனக்கு நான் இருந்தேனே’ என்று ‘மாசுச:- நீ துக்கப்படவேண்டா’ என்னும் கிருஷ்ணன் என்பேனோ! ‘‘நான் தரும் அதனை நீ விலக்காமல் ஏற்றுக்கொள்ளுமித்தனையே வேண்டுவது; உனக்கு நான் இருந்தேன்,’ என்றவனன்றோ?’ என்றபடி. மால் என்கோ - அடியார்களிடத்தில் வியாமோகத்தையுடையவன் என்பேனோ! ‘நான் இருக்கிறேன் நீ துக்கப்படாதே’ என்று அருச்சுனனை நோக்கிக் கூறியவன், உடனே 4‘உனக்கு ஞானமுண்டாகும் நிமித்தமாகச் சொன்ன இந்தக் கீதை, தவஞ்செய்யாதவனுக்கும் பத்தி இல்லாதவனுக்கும் சிரத்தை இல்லாத

_____________________________________________________

1. ‘மேலும், விபூதி யோகத்தைக் கூறாது, ‘இவற்றுள் நல்ல மேல் என்பான் என்?’
  என்னும் வினாவைத் திருவுள்ளத்தே கொண்டு, அதற்கு விடையாக ‘எல்லாம்
  சொல்ல வேண்டும்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.

2. ஸ்ரீராமா. யுத். 18 : 3. இது, ஸ்ரீராமபிரான் கூற்று.

3. ‘உனக்கு நான் இருந்தேனே’ என்றவிடத்தில் ‘நான்’ என்றது ‘அகம்’ என்ற
  சொல்லின் பொருள். முன் வாக்கியத்தின் பொருளையும் கூட்டி விவரிக்கிறார்,
  ‘நான் தரும் அதனை’ என்று தொடங்கி. இது, ஸ்ரீகீதை, 18 : 66. இதன்
  பொருள் முற்றும் வருமாறு: ‘நீ எல்லாத் தருமங்களையும் விட்டு என்
  ஒருவனையே சரணமாக அடைவாய்; நான் உன்னை எல்லாப்
  பாவங்களினின்றும் விடுவிக்கிறேன்; நீ துக்கப்பட வேண்டா,’ என்பது.

4. ஸ்ரீ கீதை, 18 : 67.