முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
130

வனுக

வனுக்கும் என்னிடத்தில் அசூயையுடையவனுக்கும் உபதேசிக்கத் தக்கதன்று,’ என்று கூறினானாதலின், ‘அடியார்களிடத்தில் வியாமோகத்தையுடையவன் என்பேனோ!’ என்கிறார். 1‘‘இதம் து தே குஹ்ய தமம் பரவக்ஷ்யாமி’ என்றது போன்று 2‘இதம் தே நாத பஸ்காய’ என்ற சுலோகத்தையும் முன்னரன்றோ சொல்லல் வேண்டும்? அங்ஙனஞ்செய்யாது, ‘சர்வ தர்மாந்’ என்ற சுலோகத்தை முந்துறச் சொல்லிப் பின்னர், ‘இதந் தே நாத பஸ்காய’ என்றான்; இதற்கு அடி என்?’ என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க, ‘திரௌபதி குழலை விரித்துக் கிடக்கையாலே அது முடிக்கைக்காக, செய்வது அறியாமையாலே மூலையில் கிடந்தாரை முற்றத்தே இட்டான்; பின்னை அர்த்தத்தின் சீர்மையை அநுசந்தித்து, ‘ஆர் அதிகாரிகளாகச் சொன்னோம்? கைப்பட்ட மாணிக்கத்தைக் கடலிலே போகட்டும்,’ என்று 3பதண்பதண் என்றான்காணும்,’ என்று அருளிச்செய்தார். மாயன் என்கோ - அடியார்கட்குத் தூது போதல் சாரதியாதல் முதலியவற்றைச் செய்யும் ஆச்சரியத்தையுடையவன் என்பேனோ! 4‘தூதர்கள் தாம் வந்த காரியம் முடிந்த பின்னர்த் தூது வந்த வீட்டில் உண்பர்கள்; ஆதலால், யானும் வந்த காரியம் முடிந்த பின் உன் வீட்டில் உண்கிறேன்,’ என்று கூறியதனால் தூது சென்றமை உணரலாகும். வானவர் ஆதியை - பிரமன் முதலானோர்களுடைய சத்து முதலியவைகள் தனக்கு உரிமையாம்படி இருக்கிற

____________________________________________________

1. ‘எதனை அறிந்து அநுஷ்டித்துப் பாவங்களினின்றும் விடுபடுவாயோ,
  அப்படிப்பட்ட அதிரகசியமான பத்தி ரூபமான உபாசனை என்கிற
  பெயரையுடைய ஞானத்தை அசூயை இல்லாத உன்பொருட்டு நன்றாகச்
  சொல்லுகிறேன்,’ என்பது ‘இதம் து தே’ என்று தொடங்கும் சுலோகத்தின்
  பொருள். இது, ஸ்ரீ கீதை. 9 : 1.

2. ‘இதம் தே நாத’ என்ற சுலோகத்தின் பொருள் மேலே தரப்பட்டுள்ளது. ஸ்ரீ
  கீதை, 18 : 67.

3. ‘பதண்பதண் என்றான்’ என்றது, ‘பரிதவித்தான்’ என்றபடி.

4. பாரதம், உத்தியோகபர்வம். இவ்விடத்தில்,

  ‘என்னி னின்னிலொரு பேத மில்லையிது என்னி னின்னிலது என்னினும்
  மின்னின் முன்னிலகு விறல்நெ டும்படைவி தூரன் வந்தெதிர் விளம்பினான்;
  உன்னி வின்னமுள தொன்று: பஞ்சவ ருரைக்க வந்தவொரு தூதன்யான்;
  நின்னி லின்னடிசி லுண்டு
நின்னுடன்வெ றுக்க எண்ணுவது நீதியோ?’

  என்ற வில்லி பாரதச் செய்யுள் ஒரு புடை ஒப்பு நோக்கலாகும்.