|
வன
வன், என் அதீனமான சத்து
முதலியவைகளையுடையவனாயிருக்கிற இருப்பை நான் எத்துணை என்று அளவிட்டுக் கூறுவது?
(6)
262
வானவர் ஆதி என்கோ!
வானவர் தெய்வம்
என்கோ!
வானவர் போகம்
என்கோ!
வானவர்
முற்றும் என்கோ!
ஊனம்இல் செல்வம்
என்கோ!
ஊனம்இல்
சுவர்க்கம் என்கோ!
ஊனம்இல் மோக்கம்
என்கோ
ஒளிமணி
வண்ண னையே!
பொ-ரை : ‘ஒளி பொருந்திய மாணிக்கம் போன்ற
வடிவையுடைய இறைவனை, நித்தியசூரிகளுடைய இருப்பு முதலானவைகட்கெல்லாம் காரணன் என்பேனோ! அவர்கட்குத்
தெய்வம் என்பேனோ! அவர்கட்கு இன்பம் என்பேனோ! அவர்கட்கு இங்குக் கூறப்படாத மற்றைப்
பொருள்கள் எல்லாமானவன் என்பேனோ! குற்றமில்லாத செல்வம் என்பேனோ! குற்றமில்லாத சுவர்க்க
இன்பம் என்பேனோ குற்றமில்லாத மோக்ஷம் என்பேனோ! யாது என்பேன்?’ என்கிறார்.
வி-கு :
இப்பாசுரம் வந்த சொல்லும் பொருளுமே பின்னும் வருதலின், சொற்பொருட்பின் வரும் நிலையணி.
மோக்ஷம் - மோக்கம்; க்ஷகரத்துக்கு இரு ககரம் வந்தன; ‘பக்ஷம், பக்கம்’ என்பது போன்று.
ஈடு : ஏழாம்
பாட்டு. 1செல்வம் முதலான புருஷார்த்தங்கள் எல்லாம் தனக்கு விபூதியாகவுடையனாய்
இருக்கிறபடியைப் பேசுகிறார்.
மேல் ‘வானவர் ஆதி’
என்ற இடம் பிரமன் முதலானோர்கட்குக் காரணன் என்னுமிடம் சொல்லிற்று. இங்கு ‘வானவர் ஆதி’
என்பது, நித்தியசூரிகட்கு நிர்வாஹகனாய் அவர்கள் இருப்புக்குக் காரணனாயிருக்கும்படியைச்
சொல்லுகிறது. ‘ஆயின், இரண்டு இடங்களிலும் சொல் ஒன்றாயிருக்க, வேறுபடுத்திப்
___________________________________________________
1. ‘ஊனமில் செல்வம்’
என்பதனைக் கடாக்ஷித்து, அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
|