முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
132

பெ

பொருள் கூறக் காரணம் என்னை?’ எனின், 1பிரமன் முதலானோர்கட்கு அவர்கள் உற்பத்தியிலே உதவி செய்வானித்தனையே; அங்ஙனமன்றி, நித்திசூரிகளுக்கு ‘எல்லாம் கண்ணன்’ என்கிறபடியே, எல்லாம் தானேயாய் இருப்பான்; அவர்களும் ‘எல்லாம் வாசுதேவனே’ என்கிறபடியே, ‘எல்லாம் வாசுதேவனே’ என்று நினைத்திருப்பார்கள்; ஆதலால் என்க. வானவர் ஆதி என்கோ-நித்தியசூரிகள் சத்துக்குக் காரணமானவன் என்பேனோ! ‘சத்துக்குக் காரணமாகையாவது என்? அது நித்தியமாயன்றோ இருப்பது?’ எனின், அது நித்தியமாயினும் ஆக; அநித்தியமாயினும் ஆக; அதனுடைய நித்தியத்துவம்     (என்றுமிருக்குந்தன்மை) அவனுடைய நித்தியமான இச்சையாலே இருக்கும்; அந்த இச்சை நெகிழில், அதனுடைய நித்தியத்துவமும் மாறும்படியாய் இருக்கும். 2‘எத்தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும், அப்போது ஒழியும்’ என்கிறபடியே, அவன் நெகிழ்ந்த அன்று பின்னை இல்லையேயாம்.

    வானவர் தெய்வம் என்கோ - அவர்களுக்கு ஆராதிக்கத் தக்கவன் என்பேனோ! வானவர் போகம் என்கோ - அவர்களுக்கு 3உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாமானவன் என்பேனோ! வானவர் முற்றும் என்கோ - அவர்களுக்குச் சொல்லப்படாத எல்லாப் பொருள்களும் என்பேனோ! ஊனம் இல் செல்வம் என்கோ - சில நாள் நின்று வற்றுமதன்றி, ஒரு நாளும் அழியாத செல்வம் என்பேனோ! ஊனம் இல் சுவர்க்கம் என்கோ - சில நாள் இருந்து பின்னை ‘த்வம்ஸ’ என்று தள்ளும்படியானது அன்றி ஒழிவில்லாத சுவர்க்க இன்பம் என்பேனோ! ‘ஆயின், ஊனமுடைய செல்வம் முதலியவைகளும் அவனுக்குச் செல்வமன்றோ? அங்ஙனம் இருக்க, ‘ஊனமில்’ என்று விசேடிப்பான்

___________________________________________________ 

1. ‘’வானவர் போகம் என்கோ வானவர் முற்றும் என்கோ’ என்று
  அருளிச்செய்வதனால் நித்தியசூரிகள் என்று கொள்ள வேண்டும்’ என்றபடி.
  இக்கருத்தினையே ‘பிரமன் முதலானோர்கட்கு’ என்று தொடங்கி அருளிச்
  செய்கிறார். ‘எல்லாம் தானேயாயிருக்கும்’ என்றது, ‘தாரக போஷக
  போக்கியங்கள் எல்லாம் தானேயாக இருப்பான்,’ என்றபடி. ‘இந்நிலை பிரமன்
  முதலான தேவர்கட்கு இல்லையே!’ என்க.

2. நான்முகன் திருவந். 38. இது, ‘அவன் உபேக்ஷித்தால் சத்தை இல்லை,’
  என்பதற்குப் பிரமாணம்.

3. திருவாய். 6. 7 : 1.